Perambalur: Union Secretary N. Krishnamurthy inaugurated the Kalaignar Free Computer Training Center set up by Minister Sivashankar!

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தொகுதிக்கு உட்பட்ட கொளக்காநத்தம் கிராமத்தில் தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அமைச்சரும், குன்னம் சட்ட மன்ற தொகுதி எம்.எல்.ஏ-வுமான சா.சி.சிவசங்கர் ஏற்பாட்டில் இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு இலவச வேலை வாய்ப்புடன் கூடிய கலைஞர் கணினி பயிற்சி மையத்தை அமைத்துள்ளார். இதன் தொடக்கவிழா நடந்தது. போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தலைமை வகித்தார். மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெகதீசன், பெரம்பலூர் எம்.எல்.ஏ. எம்.பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் வாய்ப்புடன் கூடிய கலைஞர் கணினி பயிற்சி வகுப்பை ஆலத்தூர் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் என்.கிருஷ்ணமூர்த்தி ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். 

கலைஞர் கணினி பயிற்சி மையத்தில் 3 மாத கால பயிற்சிகள் மற்றும் வேலை வாய்ப்பு தொடர்பான பயிற்சிகள் அளிக்கப்படும். இதில், +2 தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் தேர்ச்சி பெறாதவர்கள் பயிற்சியில் சேர்ந்து பயன் பெறலாம். காலை 9:30 மணி முதல் 12.30 மணி பெண்களுக்கும், மாலை 5 30 மணி முதல் இரவு 8.30 வரை ஆண்களுக்கும் இலவசமாக பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. நிகழ்ச்சியில் முன்னாள் ஆலத்தூர் யூனியன் சேர்மன் முத்துக்கண்ணு, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் சுப்ரமணியன், டி.ஆர். சிவசங்கர், மாவட்ட அமைப்பாளர் சுந்தரராசு, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் ராகவன், பாலமுருகன், அகிலா ராமசாமி, மற்றும் மாவட்ட, ஒன்றிய, திமுக கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!