Perambalur: Vacancies for Anganwadi workers, micro-anganwadi workers and Anganwadi assistants on a package wage basis: Collector’s announcement!

பெரம்பலூர் மாவட்டம், மாவட்ட திட்ட அலுவலகம் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகளின்கீழ் மாவட்டங்களில் செயல்படும் குழந்தைகள் மையங்களில் காலியாகவுள்ள 1 அங்கன்வாடி பணியாளர் 2 குறு அங்கன்வாடி பணியாளர் மற்றும் 20 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்பட உள்ளன. மாவட்டத்தில் வட்டாரம் வாரியாக நேரடி நியமனம் செய்யப்படவுள்ள அங்கன்வாடி பணியாளர், குறு அங்கன்வாடி பணியாளர் மற்றும் அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்களின் எண்ணிக்கை மற்றும் இனசுழற்சி விவரம் மாவட்ட திட்ட அலுவலகத்திலும், அந்தந்த வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகங்களிலும், தகவல் பலகையில் ஒட்டப்படும். விண்ணப்பங்களை www.icds.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு தெரிவித்து கேட்டுக்கொள்ளப்படுகிறது. இப்பணியிடங்களுக்கு 23.04.2025-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தொகுப்பூதியத்தில் பணி நியமனம் செய்யப்படும் அங்கன்வாடி பணியாளர், குறு அங்கன்வாடி பணியாளர் மற்றும் அங்கன்வாடி உதவியாளர்கள் தொடர்ந்து பன்னிரெண்டு மாத காலம் பணியினை முடித்தபின், அவர்கள் சிறப்பு காலமுறை ஊதியத்தின்கீழ் ஊதியம் பெறுவர். இப்பணியிடங்களுக்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம். 

தொகுப்பூதியமாக மாதம் ஒன்றுக்கு அங்கன்வாடி பணியாளருக்கு ரூ. 7,700-ம், குறு அங்கன்வாடி பணியாளருக்கு ரூ. 5,700-ம், அங்கன்வாடி உதவியாளருக்கு ரூ. 4,100-ம், வழங்கப்படும். 12 மாத காலத்திற்கு பின் வழங்கப்படும் சிறப்பு காலமுறை ஊதியம் மாதமொன்றுக்கு அங்கன்வாடி பணியாளருக்கு ரூ.7700-24200 என்ற விகித்திலும், குறு அங்கன்வாடி பணியாளருக்கு ரூ.5700-18000 என்ற விகித்திலும், அங்கன்வாடி உதவியாளருக்கு ரூ.4100-12500 என்ற விகித்ததிலும் வழங்கப்படும்.

அங்கன்வாடி பணியாளர் மற்றும் குறு அங்கன்வாடி பணியாளருக்கு விண்ணப்பிப்பவர்கள் தமிழ் சரளமாக எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், 25 முதல் 35 வயது வரையும், விதவைகள் / ஆதரவற்ற பெண்கள் / எஸ்.சி / எஸ்டி வகுப்பினர்- வயது 25 முதல் 40 வயது வரையும், மாற்றுத் திறனாளிகளுக்கு 25 முதல் 38 வயது வரையும் (35+3=38) இருக்க வேண்டும்.

அங்கன்வாடி உதவியாளருக்கு விண்ணப்பிப்பவர்கள் தமிழ் சரளமாக எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும், 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், 20 வயது முதல் 40 வரையும், விதவைகள் /ஆதரவற்ற பெண்கள்/எஸ்.சி/எஸ்.டி வகுப்பினர் – 20 வயது முதல் 45 வயது வரையும், மாற்றுத் திறனாளிகளுக்கு 20 முதல் 43 வயது வரையும் (40+3=43) இருக்க வேண்டும்.

காலிப்பணியிடங்களை நிரப்ப விண்ணப்பதாரர் அறிவிக்கப்பட்டுள்ள கிராமங்களிலுள்ள குழந்தைகள் மையம் அமைந்துள்ள அதே கிராமத்தைச் சேர்ந்தவர், அதே கிராம ஊராட்சிக்குட்பட்ட பிற கிராமத்ததைச் சேர்ந்தவர், அந்த கிராம ஊராட்சி எல்லையின் அருகிலுள்ள அடுத்த கிராம ஊராட்சியை சேர்ந்தவராக இருத்தல் வேண்டும். மாநகராட்சி, நகராட்சி மற்றும் நகர பஞ்சாயத்துகளிலுள்ள குழந்தைகள் மையம் அமைந்துள்ள அதே வார்டு (அ) அருகிலுள்ள வார்டு (அ) மையம் அமைந்துள்ள வார்டின் எல்லையை பகிர்ந்து கொள்ளும் வார்டை சேர்ந்தவராக இருத்தல் வேண்டும்.

காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும்க போது உரிய விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து காலிப்பணியிட குழந்தை மையம் அமைந்துள்ள வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் மட்டுமே சமர்பிக்க வேண்டும். விண்ணப்பத்துடன் பள்ளி மாற்றுச் சான்றிதழ், 10-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், 12-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், குடும்ப அட்டை / ஆதார் அட்டை, சாதிச் சான்று, வாக்காளர் அடையாள அட்டை ஆகிய சான்றிதழ்களின் சுயசான்றொப்பமிட்ட நகல்கள் இணைக்கப்பட வேண்டும். விதவை, கணவரால் கைவிடப்பட்டோர், ஆதரவற்ற பெண் (தாய்/தந்தை இறப்பு சான்று) மற்றும் மாற்றுத் திறனாளிகள் அதற்கான சான்றிதழ்களின் நகல்களையும் சுயசான்றொப்பமிட்டு இணைக்க வேண்டும். நேர்காணலின் போது அசல் சான்றிதழ்களுடன் கலந்து கொள்ள வேண்டும், கலெக்டர் கிரேஸ் பச்சாவ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!