Perambalur: Van-car collision; Youth dies!
பெரம்பலூர் அருகே உள்ள புதுக்குறிச்சி நடுத்தெருவை சேர்ந்த ரெங்கராஜ் மகன் ராமகிருஷ்ணன் (36). இவர் நேற்றிரவு காரில் பெரம்பலூர் சென்று விட்டு வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது, விஜயகோபாலபுரத்தில் உள்ள தனியார் டயர் கம்பெனி அருகே வந்தபோது, முன்னால் சென்ற வேன் மீது கார் பயங்கரமாக மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த ராமகிருஷ்ணனை மீட்டு சிகிச்சைகாக பெரம்பலூர் அரசு மருத்துமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து பாடாலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.