Perambalur: Veterans’ Flag Day: Government employees achieve record in collection; Collector praises!
பெரம்பலூர் மாவட்டத்திற்கு 2023-ஆம் ஆண்டில் கொடி நாள் நிதி வசூல் ரூ.22,50,000/- இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் பெரம்பலூர் மாவட்டத்தில் அனைத்து துறை அலுவலர்களின் ஒத்துழைப்போடு நிர்ணயித்த இலக்கை விட கூடுதலாக ரூ.29,75,550/- நிதி வசூலித்த 132% சதவீதத்துடன் சாதனை எட்டியுள்ளது. இலக்கு சதவீதத்தில் தமிழகத்தில் இரண்டாவது நிலையில் பெரம்பலூர் மாவட்டம் உள்ளது.
முன்னாள் படை வீரர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் முன்னாள் படை வீரர் நல நிதியின் மூலமாக மாதாந்திர நிதியுதவி ரூ.10,000 மும், புற்றுநோய் நிவாரண மாதாந்திர நிதியுதவி ரூ.7,000மும், மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு மாதாந்திர நிதியுதவி ரூ.7,000மும், கண் பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கான நிதியுதவி ரூ.7,000மும், பக்கவாத நிவாரண மாதாந்திர நிதியுதவி ரூ.7,000மும், முன்னாள் படைவீரர்களின் முதல் 2 மகள்களுக்கு திருமண நிதியுதவி ரூ.25,000மும், ஈமச்சடங்கு நிதியுதவி ரூ.10,000மும், விதவையர் இறப்பு ஈமச்சடங்கு நிதியுதவி ரூ.7,000மும்,
வீட்டுவரிச் சலுகை அதிகபட்சம் ரூ.10,000மும், வீட்டுக்கடன் மானியம் ரூ.1,00,000மும், தொகுப்பு நிதியின் கீழ் தொழிற்கல்விக்கு ரூ.25,000மும், டிப்ளமோ படிப்பிற்கு ரூ.20,000மும், கலை அறிவியல் படிப்பிற்கு ரூ.10,000மும், 1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ரூ.2,000 முதல் ரூ.6,000 வரையிலும், முன்னாள் படை வீர்ர்களுக்கு ஓட்டுநர் உரிமம் புதுப்பிக்க கட்டண விலக்கும், வேலைவாய்ப்பில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் தேர்வு எழுதுபவர்களுக்கு 5 சதவீத இட ஒதுக்கீடும் உள்ளிட்ட எண்ணற்ற நலத்திட்ட உதவிகள் மத்திய மாநில அரசுகளால் வழங்கப்படுகிறது.
முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர்களுக்கு கல்வி உதவித்தொகை, கண்கண்ணாடி, திருமண நிதியுதவி உள்ளிட்ட திட்டத்தின் கீழ் 7 நபர்களுக்கு ரூ.1,00,000/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், 2023ம் ஆண்டின் கொடி நாள் வசூல் இலக்கினை எய்திய 42 அரசு அலுவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும் கலெக்டர் வழங்கினார்.
முன்னாள் படைவீரர்கள், உள்ளிட்ட அரசு பணியாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள், மாணவர்கள் படைவீரர் கொடி நாள்- 2024க்கு தங்களது பங்களிப்புத் தொகையினை செலுத்த இந்த QR Code ஸ்கேன் செய்து தங்களது பங்களிப்புத் தொகையினை நேரடியாக இணைய வழியில் செலுத்தலாம். அதற்கான ரசீதினை இணைய வழியில் பெற்றுக் கொள்ளலாம் எனவும், தெரிவிக்கப்பட்டது.