Perambalur: Watermelon procurement price falls; Farmers demand government compensation!
கோடைகாலத்தில் பொதுமக்களால் பெருமளவில் வாங்கப்படும் தர்பூசணி பழங்களில் ரசாயனம் கலப்பதாக உணவு பாதுகாப்புத் துறை ஆய்வின் மூலம் எழுந்த சர்ச்சையை தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் தர்பூசணியின் கொள்முதல் விலை வீழ்ச்சியை சந்தித்ததோடு வெளி மாநில ஏற்றுமதியும் பாதித்துள்ளது, ஆதலால் அரசு தர்பூசணி பயிரிட்டு பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ள விவசயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென தர்பூசணி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்..
கோடைகால விற்பனையை மையமாக கொண்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் தர்பூசணி பயிரிடல் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.கடந்த ஆண்டு மழையின்றி கடுமையான வெயில் தாக்குதலால் பாதிக்கப்பட்ட தர்பூசணி சாகுபடி இந்த ஆண்டு வெயிலை கடந்து நன்கு காப்பு கிடைத்துள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்து வந்த நிலையில் கோடை வருவதற்கு முன்னரே வந்த கடுமையான வெயில் தாக்குதலால் கடந்த மாதம் தர்பூசணி அறுடையை விவசாயிகள் முன்னரே தொடங்கினர்.
அறுவடை சூடுபிடித்த நிலையில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் உணவு பாதுகாப்புத் துறையினர் தர்பூசணி பழங்களை ஆய்வு செய்து இரசாயனம் கலந்துள்ளதாக எழுந்த சர்ச்சையை தொடர்ந்து தர்பூசணியை பயிரிட்ட விவசாயிகள் முதல் சில்லரை வியாபாரிகள் வரை விற்பணை பாதித்து பெரும் நெறுக்கடியை சந்தித்தனர்.
தற்போது இதுகுறித்து தர்பூசணி வயல்களில் நேரடி கள ஆய்வு செய்தும் உணவு பாதுகாப்புத் துறையினர் சார்பில் தர்பூசணியை பொதுமக்கள் அச்சமின்றி உண்ணலாம் என தெரிவிக்கப்பட்டுந்தாலும் கூட வழக்கமாக கோடையில் கிடைக்கும் லாபம் தற்போது பெரும் விலைவீழ்ச்சியை சந்தித்து நஷ்டத்தை சந்தித்துள்ளதாக விவசாயிகள் புலம்பி வருகின்றனர்.
அந்தவகையில் பெரம்பலூர் மாவட்டம் எசனை கிராமத்தில் அரசலூர் சாலையில் 5 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து வெயில் காலம் என்பதால் தர்பூசணிக்கு அதிக வரவேற்பு இருந்ததால் பயிரிட்டிருந்தார் சேலம் மாவட்டம் கெங்கவல்லி சேர்ந்தவர் விவசாயி மாரிமுத்து. இவர் கடந்த ஆண்டு இதே பகுதியில் (ஜிகினா கோல்டு ரகம்) தர்பூசணி பயிரிட்டு தண்ணீரின்றி கடுமையான வெயில் தாக்கத்தால் ஆறுலட்சம் வரை நஷ்டத்தை சந்தித்துள்ளார்.தொடர்ந்து இந்த ஆண்டு மழை மற்றும் தண்ணீர் வரத்து காரணமாக நம்பிக்கையுடன் நாட்டு ரகமான தர்பூசணியை பயிரிட்டுள்ளார்.
இதில் 3 லட்சங்களுக்கு மேல் செலவளித்துள்ள நிலையில் தற்போது எழுந்த உணவு பாதுகாப்புத்துறை ஆய்வு சர்ச்சையினால் தர்பூசணி ரூபாய். 3 முதல் ரூபாய் 5 க்கும் குறைவாகவே கேட்பதாகவும், தாங்கள் வழக்கமாக வெளி மாநிலங்களுக்கு அனுப்பும் ஏற்றுமதியும் இந்த சர்ச்சையினால் தர்பூசணியை வாங்க முன்வரவில்லை என வேதனை தெரிவித்த அவர்.,வேறு வழியின்றி நன்கு விளைந்துள்ள பழங்களை அடிமாட்டு விலைக்கு சில்லரை வியாபாரிகளுக்கு குறைந்த கொள்முதல் விலைக்கு நஷ்டத்திற்கு வழங்கி வருதாக வேதனை தெரிவித்தார்.
இந்த ரசாயன சர்ச்சை ஏற்படாமல் இருந்திருந்தால் நல்ல விலை கிடைப்தோடு லாபம் கிடைக்க வேண்டிய நிலையில் அரசின் உணவு பாதுகாப்புத் துறையின் ஆய்வு சர்ச்சையின் மூலம் தமிழகம் முழுவதும் தர்பூசணி பயிரிட்டுள்ள விவசாயிகள் அனைவரும் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளதாக தெரிவிக்கும் விவசாயி தமிழக அரசு ஏற்பட்டுள்ள நஷ்டத்திற்கு பொறுப்பேற்று தர்பூசணி பயிரிட்டு பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுகு இழப்பீடு வழங்க வேண்டுமென கோரிக்கையை முன்வைத்துள்ளார்.