Perambalur: “We must ensure a victory by a margin of one lakh votes”;A. Raja MP speaks at the DMK candidate introduction meeting!

பெரம்பலூர் தனித் தொகுதி திமுக வேட்பாளர் ஜெயலட்சுமி அறிமுகக் கூட்டம், மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெகதீசன் தலைமையில் தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.
பெரம்பலூர் எம்.பி அருண் நேரு, அமைச்சர் சிவசங்கர் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினர். சிறப்புரை நிகழ்த்திய திமுக துணைப் பொதுச் செயலாளரும், எம்.பி.யுமான ஆ.ராசா பேசியதாது: திமுக சாதாரணமாக வளர்ந்து விடவில்லை. பெரியார், அண்ணா, கலைஞர், மு.க.ஸ்டாலின் போன்றவர்களால் இந்த திமுக நிமிர்ந்து நிற்கிறது. பெரம்பலூரில், ஜே.எஸ்.ராஜ், வெள்ளைச்சாமி, அண்ணா தாவூத் போன்ற உள்ளிட்ட பலரால் கட்டி எழுப்பட்டுள்ளது. இதனை மறக்கவும் முடியாது, மறுக்கவும் முடியாது. இதே போல பலரது உழைப்பை கொண்டுள்ளது. இந்த ராஜா மட்டும் திமுக அல்ல! எண்ணற்றற தொண்டர்கள் ஆதரவால் இந்த இயக்கம் இயங்குகிறது. பலரை நினைவில் கொண்டுள்ளோம் அவர்களுக்கான மரியாதையை செலுத்தி வருகிறோம்.
தற்போது நடக்க உள்ள தேர்தல் டெல்லிக்கும். தமிழ்நாட்டிற்குமான தேர்தல். சனாதனத்திற்கும் , ஜனநாயத்திற்கும் நடக்கும் தேர்தல், சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும், பெண்களுக்கும் ஓட்டுரிமை கொடுத்துள்ளது அரசியல் சாசனம். இங்கு இருக்கும் அட்சயகோபால் எசனையில் பெரிய பண்ணையாரக இருக்கிறார். அவருக்கும் ஒரு ஓட்டுதான். அவரிடம் பண்ணை வேலை செய்பவருக்கும் ஒரு ஓட்டுத்தான் என அரசியல் அமைப்பு சட்டம் அனைவருக்கும் கொடுத்துள்ளது. அதனை சனாதனவாதிகள் பறிக்க பார்க்கின்றனர். அது மட்டுமில்லாமல், இடஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகளையும் பறிக்க முயற்சிப்பதோடு, ஒடுக்கப்பட்ட மக்கள் அடிமைதனத்தில் இருந்தும், வாழ்க்கையில் சுகந்திரம், சமத்துவம் விடாதல் தடுக்க நினைத்து பழைய அடிமை முறைக்கே பெண்களையும், ஆண்களையும் கொண்டு செல்ல பாஜக பார்க்கிறது. எனவே, அந்த பாஜகவை தமிழ்நாட்டில் வேரூன்ற விடக்கூடாது. அதற்காக, பெரம்பலூரில் திமுகவால் நிறுத்தப்பட்ட வேட்பாளர் எஸ்.டி.ஜெயலட்சுமியை ஒரு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். இதை பார்த்து அமித்ஷா, மோடி ஆகியோர் இது தெரிந்து கொள்ளும் வகையில் தீவிரமாக தேர்தல் வேலை செய்து வெற்றி பெற செய்ய வேண்டும், வேட்பாளர் ஜெயலட்சுமி பெரம்பலூர் மக்களின் குரலாக சட்ட மன்றத்தில் ஒலிப்பார் என பேசினார். அவரின் நல்ல சமூக நோக்கம் கொண்ட மருத்துவர் மட்டுமல்லாது சிவப்பு சிந்தாந்தவாதி எனவும் குறிப்பிட்டார்.
முன்னதாக வேட்பாளர் ஜெயலட்சுமி உரையாற்றினார். பெரம்பலூர் எம்.எல்.ஏவும், நகர செயலாளருமான ம.பிரபாகரன் வரவேற்றார். இந்திய தேசிய காங்கிரஸ் மாவட்டத் தலைவர் சி.ராஜேந்திரன், தேமுதிக மாவட்ட செயலாளர் துரை.சிவா ஐயப்பன், விசிக மாவட்ட செயலாளர் ந.கிருஷ்ணகுமார், கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர்கள் பெ.ரமேஷ், வெ.ஜெயராமன், மதிமுக மாவட்ட செயலாளர் எஸ்.ஜெயசீலன், மமக மாவட்ட செயலாளர் அ.குதரத்துல்லா, மஜக மாவட்ட செயலாளர் முஹமது யூனூஸ், திக மாவட்டத் தலைவர் சி.தங்கராசு, மாவட்ட செயலாளர் ஜி.சர்புதீன், இந்திய தொழிலாளர் கட்சி நிறுவனர் ஈஸ்வரன், சிவசேனா கட்சி மாவட்ட பொறுப்பாளர் பரஞ்சோதி, தமிழ்புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் குரல் வள்ளுவன், எம்.ஜி.ஆர். கழகம் மு. சக்திவேல், கிறித்துவ நல்லெண்ண இயக்க மாவட்ட செயலாளர் ரினோபாஸ்டின், இந்திய முஸ்லீம் லீக் மாவட்ட செயலாளர் சர்புதீன், கொமதேக மாவட்ட செயலாளர் இளையப்பன், மநீம மாவட்ட செயலாளர் சி.முத்துக்குமார், எஸ்டி.பி.ஐ கட்சி மாவட்ட தலைவர் முஹமது ரஃபீக், உள்ளிட்ட பலர் முன்னிலை வகித்தனர். மாநில பொறியாளர் அணி துணை அமைப்பாளர் ஆர்.பி. பரமேஸ்குமார், மாநில, மாவட்ட, ஒன்றிய, பேரூர், கிளை பொறுப்பாளர்கள், பல்வேறு சார்பு அணியினர் உள்பட ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.











kaalaimalar2@gmail.com |
9003770497