Perambalur: We will always work in Anna’s way; we will oppose Hindi and overcome poverty, says A.Raja MP at the Annadurai statue inauguration ceremony!

பெரம்பலூர் அருகே உள்ள வேப்பந்தட்டை யூனியன் ஆபீஸ் முன்பு ரூ. ஒரு லட்சம் மிதிப்பில் சிதிலமடைந்த சிலைய மாற்றி அமைக்கப்பட்டிருந்த திமுக நிறுவனர் சி.என் அண்ணாதுரையின் புதிய சிலையை திறந்து வைத்த திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி பேசியதாவது: இந்திக்கு தாய்மொழி என்று சொல்லப்படக்கூடிய சமஸ்கிருதம் எங்களுக்கு தேவையில்லை.. மூன்று முக்கிய முடிவுகளை அண்ணா அவர்கள் 67-லே தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு அறிவித்து சட்டமாக ஆக்கிவிட்டு சொக்னார். தமிழ்நாடு என்ற பெயர் இருக்கிற வரை, சுயமரியாதை சட்டம் இருக்கிற வரை, இரு மொழிக் கொள்கை இந்திக்கு இடமில்லை என்கிற சொல்கிறவரை நான் இறந்துவிட்டாலும் அண்ணாதுரை தான் ஆள்கிறான் என சொன்னார்.
அதேபோல, கலைஞர் அவர்கள் தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து, பெண்களுக்கு சொத்தில் சம பங்கு இப்படி பல திட்டங்களை தீட்டி நான் மறைந்து விட்டாலும், பின் ஒருவர் வந்து எங்களுக்கு சொத்திலே பங்கில்லை என்ற சொல்ல முடியாத சூழலை உருவாக்கியுள்ளோம். தமிழ் செம்மொழி இல்லை என எந்த கொம்பனாலும் அதை சொல்ல முடியாது. அதை நான் செய்து இருக்கிறன். இது போன்ற திட்டங்கள் இருக்கிறபோது நான் இருந்து விட்டாலும் கருணாநிதி தான் தமிழ்நாட்டை ஆள்கிறான் என பொருள் என அவரும் சொன்னார்.
நேற்றைக்கு நமது முதலமைச்சர் பேசியதை எல்லோரும் பார்த்திருப்பீர்கள். இந்தியாவில் மட்டுமல்ல உலகத்திலேயே மகளிர் உரிமை தொகை கொடுத்தது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்கிற நான்தான். பட்டியலிட்டி அத்தனை பட்டியலையும் சொல்லி, இனி யாராவது மீண்டும் ஆட்சிக்கு வந்து 50 ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்டாலின் செய்தது தவறு எனவே அவற்றையெல்லாம் திரும்ப பெறுகிறேன் என எந்த முதலமைச்சரும் சொல்ல முடியாது என ஆளாகியிருக்கிறேன். அதற்கும் மு க ஸ்டாலின் தான் ஆள்கிறான் என பொருள் என அவரும் சொன்னார். அண்ணா கலைஞர் ஸ்டாலின் என்கின்ற மூன்று பெரும் தலைவர்களும் ஆற்றிருக்க பணிகளை இந்தியாவில் எந்த முதலமைச்சரும் செய்யவில்லை, செய்ய முடியாது. அப்படிப்பட்ட கொள்கைகளை தத்துவத்தைக் கொண்டு இருக்கிற இயக்கம் திராவிட முன்னேற்ற கழகம். அந்த திராவிட முன்னேற்றக் கழகத்தை தோற்றுவித்த அண்ணார் அவர்களின் சிலையை வேப்பந்தட்டையில் 2008 இல் நிறுவப்பட்டு, அது சிகலமடைந்த நிலையில், அதனை எடுத்துச் சொல்லி அருமை சகோதரி மகாதேவி ஜெயபால் அவர்கள் அதை நானே முன்னின்றடுத்து செய்கிறேன் என்று அவர் சொன்னார். இல்லை இல்லை நான் செய்கிறேன் நானும் மாவட்ட செயலாளர்தான் நமது ஜெகதீசனும் சொன்னார். இவர்களுக்கு முன்னாலேயே நான் இளைஞர் அணியில் பணியாற்றினேன் நான் செய்கிறேன் என்று ஜெகதீஸ்வரன் சொன்னார். என்றாலும் கூட, அந்தப் பெருமை பெண்களுக்கு போகட்டும் என்று சொல்லி நம்முடைய மகாதேவி ஜெயபால் அவர்களை செய்ய சொன்னோம். சிறப்பாக செய்து இருக்கிறார்கள். அவருக்கும் நன்றி வாழ்த்துக்களை தெரிவித்து, உங்களை சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்து அண்ணா வழியில் அயராது உழைப்போம். இந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம், மத்தியிலே கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி வறுமையை வெல்வோம் என சொல்லி உங்களிடத்திலே விடைபெறுகிறேன் நன்றி என பேசினார்.மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், பெரம்பலூர் எம்.எல்.ஏ பிரபாகரன், மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணைச் செயலாளர் பா.துரைசாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் வக்கீல் என்.ராஜேந்திரன், மாவட்ட பொருளாளர் செ.ரவிச்சந்திரன், மாவட்ட துணைச் செயலாளர் டி.சி. பாஸ்கர், ஒன்றிய பொறுப்பாளர் ஜெகதீஸ்வரன், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் மகாதேவி ஜெயபால், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் செல்வக்குமார், ஒன்றிய செயலாளர்கள் எம்.ராஜ்குமார், செ.நல்லதம்பி, ந.ஜெகதீஷ்வரன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் து.ஹரிபாஸ்கர், மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் பாளை.மணிவண்ணன், மாவட்ட பிரதிநிதிகள் எஸ்.அழகுவேல்,செல்வம், ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் ரா.சிவா, பசும்பலூர் கிளைச் செயலாளர் ஜெயபால், உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.










kaalaimalar2@gmail.com |
9003770497