Perambalur: Wedding king who married 3 women; caught posting on Instagram.
3 பெண்களை திருமணம் செய்து மோசடியில் ஈடுபட்ட ஆக்டிங் டிரைவரிடம் பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள ரெங்கநாதபுரம் கிராமத்தை சேர்ந்த சேகர் மகன் தினேஷ்(27).
ஆக்டிங் டிரைவராக வேலை பார்த்து வரும் இவன், கடந்த 2019ம் ஆண்டு சென்னையில் வேலை செய்து கொண்டிருந்த போது, உன்னை உயிருக்கு உயிராய் காதலிக்கிறேன் என வள்ளி என்ற இளம் பெண்ணிடம் ஆசை வார்த்தைகளை கூறி, நீ இல்லை என்றால் செத்து போவேன் என மிரட்டி, பயமுறுத்தி அழைத்து போய் திருமணம் செய்து 3 மாத காலம் குடும்பம் நடத்திய நிலையில், வள்ளியை நிர்க்கதியாய் தவிக்க விட்டு அங்கிருந்து எஸ்கேப்பாகி பெரம்பலூர் வந்து மேலப்புலியூரில் உள்ள தன் தாய் வழி பாட்டி வீட்டில் தங்கி வழக்கம் போல் தினேஷ் ஆக்டிங் டிரைவராக பணியாற்றி வந்துள்ளான்.
இந்நிலையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் நர்சாக பணியாற்றி வந்த மேலப்புலியூரை சேர்ந்த சவுந்தர்யா என்ற பெண்ணிடம் அதே பேட்டனில் காதலிப்பதாக ஆசை வார்த்தைகளை கூறி நம்ப வைத்து, நீ இல்லை என்றால் செத்து போவேன் என மிரட்டி பயமுறுத்தி இரண்டாவதாக திருமணம் செய்து 3 மாத காலம் குடும்பம் நடத்தி விட்டு, சவுந்தர்யாவிடமிருந்து விலகி பெரம்பலூர் எளம்பலூர் சாலையில் வாடகை வீட்டில் தங்கி இருந்த நிலையில், கடந்த 3 மாதத்திற்கு முன்னர் கல்பாடி கிராமத்திற்கு சென்று வரும் மினி பஸ்சில் ஆக்டிங் டிரைவராக பணியாற்றிய போது, பழக்கமான கல்பாடி கிராமத்தை சேர்ந்த எம்எஸ்சி.,இறுதி ஆண்டு பயிலும் கல்லூரி மாணவியை வழக்கம் போல் அதே பேட்டனில் ஏமாற்றி கடந்த 10 நாட்களுக்கு முன்னர் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக 3வது திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி வந்த நிலையில், திருமணத்தின் போது மூன்றாவது மனைவியுடன்
எடுத்து கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் தினேஷ் பகிர்ந்த நிலையில், அதனை கண்ட இரண்டாவது மனைவி சவுந்தர்யா தனது 4 வயது மகனுடன், தினேஷின் மூன்றாவது மோசடி திருமணம் குறித்து பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்த புகாரின் பேரில், இன்ஸ்பெக்டர் சுப்புலக்ஷ்மி தலைமையிலான போலீசார் தினேஷை அழைத்து வந்து விசாரணை நடத்தி வரும் நிலையில், மூன்றாவது மனைவி தனது வாழ்க்கை பறிபோய் விட்டதே என்ற விரக்தியில் தினேஷை விட்டு விலகி பெற்றோருடன் செல்ல முடிவெடுத்துள்ளார்.
இதற்கிடையே போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், ஏழை இளம் பெண்கள் மூவரிடம் ஒரே பேட்டனில் பழகி, பயமுறுத்தி, மிரட்டி அடுத்தடுத்து திருமணம் செய்து
இன்ஸ்டா பதிவால் இம்சைக்குள்ளான ஆக்டிங் டிரைவரான தினேஷ் மீது அடிதடி, அட்ராசிட்டி, வழிப்பறி, மிரட்டல் என பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரிய வந்தது கண்டு அதிர்ச்சடைந்துள்ளனர்.
இளம் பெண்களிடம் காதலிப்பதாக ஆசை வார்த்தைகளை கூறி பழகி நம்ப வைத்து, மிரட்டி, பயமுறுத்தி தாலி கட்டி 6 மாதங்கள் மட்டுமே குடும்பம் நடத்தி மோசடியில் ஈடுபட்ட ஆக்டிங் டிரைவரின்
ஆட்டத்தை ஒரு பாடமாக எடுத்து கொண்டு பெண்கள் காதல் வலையில் விழுந்து தங்கள் வாழ்க்கையை வீணாக்கிக் கொள்ளக் கூடாது என போலீசார் தெரிவிக்கின்றனர்.