Perambalur: Wife commits suicide by hanging herself after husband drinks poison in family dispute!
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள அசூர் கிராமத்தை சேர்ந்தவர் இளவரசன் (33), இவர் ஒதியம் பிரிவு சாலையில் சம்சா தயாரித்து மொத்த விற்பனை செய்து வருகிறார். இவருக்கு அந்தூரை சேர்ந்த கீர்த்திகா (27) உடன் 10 09 2023 அன்று திருமணமாகி, 6 மாத பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், நேற்றிரவு இருவருக்கும் குடும்பத்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஒருவருக்கொருவர் சந்தேகப்பட்டு வாக்குவாத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், மது போதையில் இருந்து இளவரசன் இன்று அதிகாலை விஷம் அருந்தினார். இதை அறிந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, பெரம்பலூர் தனியார் மருத்துவக் கல்லூரியில் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். இதில் மனமுடைந்த கீர்த்திகா வீட்டனுள் சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த குன்னம் போலீசார், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கணவன் – மனைவி இருவரும் குடும்பத்தகராறில் தற்கொலை செய்து கொள்ள ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் இன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.