Perambalur: Wife stabbed to death! Husband commits a heinous act!! Daughter who tried to stop him was also injured!
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே உள்ள தொண்டமாந்துறை கிராமத்தை சேர்ந்த மாரியம்மாள்(45) என்பவரை அவரது கணவர் தங்கவேலு(50), கத்தியால் குத்தி இன்று கொடூரமாக கொலை செய்து விட்டார்.
தாய் மீதான கொலைவெறித் தாக்குதலை தடுக்க முயன்ற மாரியம்மாள்- தங்கவேலு தம்பதியினரின் மகள் கவிதா (25), கத்தி குத்து காயங்களுடன் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்த தகவல் அறிந்த அரும்பாவூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, கொலையுண்டு கிடந்த மாரியம்மாளின் சடலத்தை கைப்பற்றி, உடற்கூறு ஆய்வுக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, கொலையாளி தங்கவேலுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவி மதிப்பதில்லை! என தாழ்வு மனப்பான்மை கொண்டதால், ஆத்திரமடைந்த கணவன், மனைவியை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்ததாக கூறப்படுகிறது. இச்சம்பவம் இன்று காலை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.