Perambalur: Winds blowing like a storm; Public suffering! Trees fell in many places!
பெரம்பலூர் மாவட்டத்தில், அடுத்த மாதம் வீசவேண்டிய ஆடிக்காற்று தற்போது, ஆனி மாதத்திலேயே வீசி வருகிறது. இதனால், சாலையில் அள்ளித் தெளிக்கும் புழுதி , குப்பைகள், தெருக்களில் பறந்து வீடுகளை சென்றடைகிறது. சாலையில் செல்லும் பயணிகளும், வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மேலும், காற்றின் தாக்குதலுக்கு ஈடு கொடுக்க முடியாமல் மின்சாரக் கம்பிகள் ஒன்றோடொன்று உரசிக் கொள்வதால், அடிக்கடி மின்சாரம் தடைபடுகிறது. வீட்டு மாடியில் காயவைக்கப்படும் துணிகள் காற்றில் பறக்கின்றன. பல பகுதிகளில் காற்றின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாத முருங்கை, வாழை, வைநாரை மரங்கள் முறிந்து வீழ்ந்தன. வாழை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் அச்சத்துடன் உள்ளனர். அடுத்த மாதம் வீச வேண்டிய ஆடி பருவக்காற்று தற்போது ஆனி மாதமே அதிவேகத்தில் வீசி வருவதால், தகரத்தில் அமைக்கப்பட்டுள்ள கூரைகளும் ஆட்டம் கண்டு வருகின்றன. காற்றின் தாக்கம் மதிய வேளையிலும், இரவிலும் மற்ற நாட்களை காட்டிலும் அளவிற்கு அதிவேகத்துடன் பலத்த சத்தத்துடன் வீசி வருகிறது. சாலையில் பைக்கில் செல்வோர்கள் கவனத்துடன் செல்லவேண்டும்.