Perambalur: Woman Worker Praised for Handing Over 3-Sovereign Gold Jewelry Found on the Ground to the Police!

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் பயணி ஒருவர் தவறவிட்ட நகையை நேர்மையுடன் எடுத்து போலீசில் ஒப்படைத்த போளி கடையில் வேலை செய்யும் பெண் தொழிலாளியை போலீஸாரும் பொதுமக்களும் பாராட்டினர்.

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் போளி கடை உள்ளது. இந்த கடையில் மாரியம்மாள் என்ற பெண் தொழிலாளி வேலை பார்த்து வருகிறார். வழக்கம் போல் இன்று காலை கடையை திறந்து கடை முன்பு கூட்டிய போது அங்கு கிடந்த மணி பர்சை எடுத்துப் பார்த்தார். அதில் 3 பவுன் தங்கச் செயின் இருந்துள்ளது. உடனடியாக, அந்த நகையை தனது கடை உரிமையாளர் ஜெயக்குமாரிடம் கூறியதுடன் அவருடன் சென்று பெரம்பலூர் டவுன் போலீசில் ஒப்படைத்தனர்.

இந்நிலையில், பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே உள்ள தொண்டப்பாடியை சேர்ந்த மகேஸ்வரி என்பவர் தனது நகையை காணவில்லை என புதிய பேருந்து நிலையம் பகுதியில் அழுது புலம்பி உள்ளார். அந்த நகை இந்த பகுதிகளில் கிடந்ததாகவும், அதை போலீஸ் ஸ்டேசனில் ஒப்படைத்துள்ளதாகவும் தெரிவித்தனர். போலீஸ் நிலையம் சென்ற அந்தப் பெண் எஸ்.எஸ்.ஐ அன்னகாமுவிடம் நகையை பெற்றுக் கொண்டார்.

கீழே கடந்த 3 பவுன் நகையை நேர்மையுடன் எடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த போளிக் கடையில் வேலை செய்யும் பெண் தொழிலாளியை போலீசார் மற்றும் பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!