Perambalur: Women from the Nerikura community welcomed Saranya—the candidate for the Kunnam constituency—by adorning her with garlands of glass beads as she arrived for her election campaign.

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட புதுக்குறிச்சி, தெரணி, காரை பகுதிகளில் இன்று காலை தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினருடன் அதிமுக ஆலத்தூர் ஒன்றிய செயலாளர் என்.கே கர்ணன் தலைமையில் இரட்டை இலை சின்னத்திற்கு ஐஜேகே வேட்பாளர் சரண்யா தீவிர வாக்கு சேகரிப்பில ஈடுப்பட்டார். காரை ஊராட்சிக்கு உட்பட்ட மலையப்ப நகர் நெறிகுறவர் சமுதாய மக்களிடம், ராமலிங்கபுரம் பகுதியில் வசிக்கும் கழைக்கூத்து செய்யும் தொழிலாளர்களிடம் வாக்கு சேகரித்தார். அப்போது அங்கிருந்த நெறிக்குறவர்கள் சமூகத்தை சேர்ந்த பெண்கள், தாங்கள் முடித்த பாசிமணி மாலைகளை அணிவித்து தமாகா காரை சுப்பிரமணியன், பிஜேபி சிவக்குமார், அதிமுக பொறுப்பாளர் சங்கர் தலைமையில் வரவேற்றனர். பின்னர், அவருக்கு ஆரத்தி எடுத்து வெற்றி திலகமிட்டு வாழ்த்தினர். அப்போது தற்போது யாரும் திமுகவில் இல்லை என்றும் தமாக, பாஜக, அதிமுகவில் மட்டுமே உள்ளதாக தெரிவித்தனர்.

அப்போது பேசிய ஆலத்தூர் ஒன்றிய செயலாளர் என்.கே. கர்ணன், அதிமுக ஆட்சிகளில் செய்து கொடுக்கப்ட்ட பணிகளை எடுத்துரைத்தார். முன்னாள் துணை சபாநாயகர் புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதாணுங்க என்ற எம்.ஜி.ஆர் பாடலை பாடி வாக்குகளை சேகரித்தார். வேட்பாளர் சரண்யாவும், இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து தன்னை வெற்றி தங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றுவதாகவும், அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகளையும் எடுத்துரைத்து வாக்குகளை சேகரித்தார்.

முன்னாள் எம்.பி சந்திரகாசி, பாமக மாவட்ட செயலாளர் செந்தில்குமார், தாமக மாவட்டத் தலைவர் கிருஷ்ணஜனதார்த்தன், அமமுக மாவட்ட செயலாளர் கார்த்திகேயேன், முன்னாள் பெரம்பலூர் சேர்மன் ஜெயக்குமார், முன்னாள் காரை ஊராட்சித் தலைவர் கலையரசன், குரும்பாபாளையம் சி.நாகராஜன், பிஜேபி, புதிய தமிழகம், புரட்சி பாரதம் உள்ளிட்ட ஐஜேகே கட்சி நிர்வாகிகள் பலர் திரளாக கலந்து கொண்டனர்.

பின்னர், வேட்பாளர் சரண்யா ஆலத்தூர் ஒன்றியத்தில் உள்ள வரகுபாடி, சிறுகன்பூர், தெற்குமாதவி, நத்தக்காடு, S குடிக்காடு, சாத்தனூர், அணைப்பாடி, அயினாபுரம், கொளக்காநத்தம், கொளத்தூர் ஆகிய பகுதிகளில் வாக்குகளை சேகரித்தார். அங்கும் அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்று, வெற்றி திலகமிட்டு வாழ்த்தினர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!