Perambalur: Women Stage Road Blockade, Detaining Government Bus with Empty Pots to Demand Drinking Water!

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சாத்தனூர் குடிக்காடு பகுதியை சேர்ந்த பெண்கள் முறையாக குடிநீர் வினியோகம் செய்யக்கோரி காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதுடன் அவ்வழியாக வந்த அரசு பேருந்தையும் சிறைப்பிடித்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள், வருவாய்துறையினர், காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு காண்பதுடன் உடனடியாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக அளித்த உறுதியின் பேரில் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு சென்றனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பை போலீசார் சரிசெய்தனர்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!