Perambalur: World Women’s Day celebration on behalf of the Gokula People’s Party!
பெரம்பலூர் மாவட்ட கோகுல மக்கள் கட்சியின் சார்பில் உலக மகளிர் தினவிழா பெரம்பலூரை அடுத்த எசனை கிராமத்தில் உள்ள யாதவ திருமண மகாலில் நடந்தது. விழாவிற்கு மாவட்ட மகளிரணி தலைவர் மல்லிகா அர்ஜூனன் தலைமை வகித்தார். மாநில தலைவர் சேகர் சிறப்புரை ஆற்றினார். மாநில செயலாளர் ஸ்ரீஅம்மன் முத்தையா, விஜயா முத்தையா முன்னிலை வகித்தனர். மாணவி ஹன்சிகா ராஜேந்திரன், மன்னர் வீரமுத்துகோனின் வீரவரலாறு குறித்து தொடக்க உரையாற்றினார். சிறுமிகளின் வரவேற்பு நடனமும், கோகுல மக்கள் கட்சி மகளிரணியினரின் சமுதாய முன்னேற்றம் குறித்த கருத்துரையாடல் நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இதில் ஆங்கில பேராசிரியை தென்றல் வினோதினி பெண்ணே விழித்திரு என்ற தலைப்பில் பேசினார். ஒன்றிய மகளிரணி செயலாளர் சித்ராசின்னசாமி, பெரம்பலூர் மாவட்ட நிர்வாகிகள் பிரபாகரன், முக்கடல் ராஜ்மோகன், திருவள்ளுவர் பெரியசாமி மற்றும்எசனை பாஸ்கர் உள்பட திரளான பேர் கலந்து கொண்டனர். பெரம்பலூர் மாவட்டத்தில் கோகுல மக்கள் கட்சியில் சிறப்பாக பணியாற்றிவரும் மாவட்ட, நகர, ஒன்றிய பெண் நிர்வாகிகள் 300-க்கும் மேற்பட்டவர்களுக்கு கட்சி சார்பில் மகளிர் தினத்தை ஒட்டி சேலை வழங்கி கவுரவிக்கப்பட்டது. முன்னதாக பிரசன்யா சேகர் வரவேற்றார். எசனை கிளையைச் சேர்ந்த மேகலா பிரபு நன்றி கூறினார்.