Perambalur: You can apply for membership in the District Legal Services Commission!

பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் இயங்கி வரும் நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் காலியாக உள்ள ஒரு உறுப்பினர் பதவிக்கு மக்கள் சேவை பயன்பாட்டுத்துறையில் பணியாற்றிய அனுபவம் வாய்ந்த, பெரம்பலூர் மாவட்டத்தை சார்ந்த நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த உறுப்பினர் பதவிக்கு போக்குவரத்துத்துறை, தகவல் தொடர்புத் துறை, மின்சார வாரியம், காப்பீட்டுக் கழகம் மருத்துவத் துறை மற்றும் கல்வித் துறை போன்ற துறைகளில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற 62 வயதிற்குட்பட்ட நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பங்கள் 25-03:25 அன்று மாலை 5.00 மணிக்குள் தலைவர், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, மாவட்ட நீதிமன்ற வளாகம், பெரம்பலூர் 621212 என்ற முகவரிக்கு நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பும்படி அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!