Perambalur: You can apply to be a member of the district-level Vigilance & Monitoring Committee in the Adi Dravidian & Tribal Welfare Department; Perambalur Collector’s information!
வன்கொடுமை தடுப்புச் சட்டம் 1989, வன்கொடுமை தடுப்புச் சட்டம் விதிகள் 1995 மற்றும் உட்பிரிவு 17(1)-ன்படி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமைத் தடுப்பு விதிகள் 1995 மற்றும் திருத்த விதிகள் 2016-ல் உட்பிரிவு 16-ன்படி அமைக்கப்படும் மாவட்ட அளவிலான விழிப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் பதவிக்காலம் 3 ஆண்டுகளாகும். இந்நிலையில் பெரம்பலூர், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையில் கடந்த 2021 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட மாவட்ட அளவிலான விழிப்பு மற்றும் கண்காணிப்புக்குழு உறுப்பினர்களின் பதவிக்காலம் 3 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
எனவே, 2025 ஆம் ஆண்டில் மாவட்ட அளவிலான விழிப்பு மற்றும் கண்காணிப்புக்குழு உறுப்பினர்களை புதியதாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டியுள்ளதால் இக்குழுவில் குரூப்-ஏ தகுதியுள்ள ஆதிதிராவிடர் ∕ பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த அலுவலர்கள் மூன்று நபர்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பைச் சார்ந்த அலுவல் சாரா- நான்கு நபர்கள் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பு அல்லாத அலுவல் சாரா தொண்டு நிறுவன மூன்று நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட இருப்பதால் இப்பிரிவில் குழு உறுப்பினராக விரும்பும் தகுதியான நபர்கள் உரிய சான்று ∕ ஆவணங்களுடன் தனது விண்ணப்பத்தினை 25.02.2025 தேதிக்குள், பெரம்பலூர், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தரைத்தளத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ வழங்கிடுமாறு கலெக்டர் கிரேஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.