Perambalur: Youth arrested for selling ganja to minors!
பெரம்பலூர் போலீஸ் ஸ்பெசல் சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து இன்று, பெரம்பலூர் – துறையூர் சாலையில் அரசு மருத்துவமனை ரவுணடானா அருகில் சந்தேகத்திற்கிடமாக நின்றுகொண்டிருந்த சங்கு பேட்டை பகுதியை சேர்ந்த தங்கராசு மகன் மனோகர்(19) என்பவரை விசாரணை செய்ததில் அவர் இளம் சிறார்களுகளிடம் கஞ்சா விற்பனை செய்வது தெரியவந்தது.
அவரை வழக்குப்பதிவு செய்து, கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 40 கிராம் கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்தனர். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறைக்காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுபோன்று கஞ்சா, குட்கா மற்றும் கள்ளச்சாராயம் போன்ற அரசால் தடைசெய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்யும் நபர்களை பற்றிய தகவலை அருகில் உள்ள போலீஸ் ஸ்டேசன் அல்லது எஸ்.பி ஆபிசிற்கோ தகவல் தெரிவிக்கலாம் என்றும் தகவல் தெரிவிக்கும் நபர்களின் விவரங்கள் இரகசியம் காக்கப்படும் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.