Perambalur: Youth brutally murdered by stoning; Police arrest 4 people and conduct intensive investigation!

பெரம்பலூர் அருகே உள்ள கோனேரிப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் நைனப்பன்-ஜோதி தம்பதியரின் மகன் பெரியசாமி (37), டிப்ளமோ மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்துள்ள இவர், சென்னையில், ஒரு தனியார் கம்பெனியில் சூப்பர்வைசராக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு சுகந்தி(28), என்ற மனைவியும் நிகீஸ்வரன் மகீஸ்வரன் என இரண்டு மகன்களும் உள்ளனர்.

இதனிடையே கடந்த 2 வருடங்களுக்கு முன்னர் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பெரியசாமியும், சுகந்தியும் ஒருவரை ஒருவர் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், மனைவி பிரிந்த துக்கம் தாளாமல் பெரியசாமி மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையானதாக கூறப்படுகிறது. மேலும் தன்னோடு சேர்ந்து வாழும் படி சுகந்தியிடம் பெரியசாமி தகராறு செய்து வந்த நிலையில் நேற்று நள்ளிரவு வழக்கம் போல் பிரச்சனை நடந்துள்ளது. இந்நிலையில் கோனேரிப்பாளையம் கிராமத்தில் இருந்து பெரம்பலூர் புறவழிச் சாலை செல்லும் வழியில் உள்ள வயலில் பெரியசாமி வசித்து வந்துள்ளார். இன்று அதிகாலை 1.30 மணியளவில், சுகந்தி, சுகந்தியின் தந்தை சுந்தரராஜ் மற்றும் சுகந்தியின் தம்பி சுரேஷ் ஆகியோர் பெரியசாமி வயலுக்கு சென்று இரும்பு கம்பி மற்றும் கல், கட்டையால் தாக்கியதில் தலை, கால் மற்றும் கை ஆகிய இடங்களில் காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார்.

இதுகுறித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற பெரம்பலூர் நகர போலீசார் பெரியசாமியின் சடலத்தை கைப்பற்றிய உடற்கூறு ஆய்வுக்காக, பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, குடும்ப தகராறு காரணமாக பெரியசாமி கல்லால் அடித்து கொடூரமாக கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் அவரது மனைவி சுகந்தி மாமனார் பெரியசாமி உள்ளிட்ட 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வாலிபர் ஒருவர் கல்லால் அடித்து கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் கோனேரிப்பாளையம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!