Perambalur: ZED: Micro, Small and Medium Enterprises Sustainable Defect-Free Production, Product-Free Production Certification Scheme; Collector Information!
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் இந்திய பொருளாதாரத்தின் முக்கிய தூண்கள் ஆகும். இந்நிறுவனங்கள் முன்னேற சரியான வழிகாட்டுதலும் ஆதரவும் தேவை என்பதை அறிந்த இந்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் அமைச்சகம் இந்த துறையை மேம்படுத்த சில புரட்சிகரமான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் உலகளாவிய போட்டியை எதிர்கொள்ள மற்றும் சுயசார்பு இந்தியாவை உருவாக்கிடும் வகையில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு நிலையான பழுதில்லா உற்பத்தி, விளைவில்லா உற்பத்தி சான்றளிப்பு திட்டம் (ZED) திட்டத்தை இந்தியா அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது.
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு நிலையான பழுதில்லா உற்பத்தி, விளைவில்லா உற்பத்தி (ZED) சான்றளிப்பு திட்டம் மூலம், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் உற்பத்தி பழுதை கணிசமாக குறைத்தல், உற்பத்தியினை அதிகரித்தல், ஆற்றலை சேமித்தல், இயற்கை வளங்களை சிறந்த முறையில் பயன்படுத்துதல், சந்தைகளை விரிவுபடுத்துதல் போன்றவற்றை செய்ய முடியும்.
மேலும், மதிப்பீடு மற்றும் வழிகாட்டுதல் மூலம் மாற்றம் செய்தல், நேரடி வழிகாட்டுதல் மற்றும் தொழில்நுட்பத் தலையீடுகள் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு நிறுவனங்களின் போட்டித் தன்மையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு நிறுவனங்களினை பழுதில்லா உற்பத்தி, விளைவில்லா உற்பத்தி ஊக்குவித்து நிறுவனங்களினை சாதனையாளர்களாக (Champions) உருவாக ஒரு விரிவான உந்துதலை அளிக்கவும், அதன் தொடர்பான நடைமுறைகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்திடும் விதமாக பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் 25.02.2025 அன்று மாலை 4 மணியளவில் நொய்டாவினை தலைமையிடமாக கொண்டு செயல்படும் M/s RSJ ஆய்வு நிறுவன வியாபார வளர்ச்சி நிருவாகி மூலமாக விழிப்புணர்வு முகாம் நடத்தப்படவுள்ளது. இந்த விழிப்புணர்வு முகாமில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள உற்பத்தி நிறுவனங்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என கலெக்டர் கிரேஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.