Performance Competitions for Perambalur District Youth
பெரம்பலூர் அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் விடுத்துள்ள தகவல் :
பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் தங்கள் தொழில்திறனை வெளிக்காட்டுவதற்கான திறனாய்வு போட்டிகள் எதிர்வரும் செப்டம்பர் 26 செவ்வாய் கிழமை அன்று கீழக்கணவாயில் அமைந்துள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற உள்ளது.
இந்நிகழ்ச்சியில் இயந்திரவியல் (மெக்கானிக்கல்), மின்னியல் மற்றும் மின்னனுவியல் (எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக்ஸ்) மின்னனுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் (எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேசன்) ஆகிய துறைகளில் திறனாய்வு போட்டிகள் நடைபெற உள்ளது.
இப்போட்டிகளில் பொறியியல் கல்லூரிகள், பொறியியல் பல் தொழில்நுட்ப கல்லூரிகள் (பாலிடெக்னிக்) கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும் தொழிற்பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றோர் தொழிற்சாலைகளில் தொழிற் பழகுநர்களாய் பணிபுரிவோர் (அப்ரண்டிஸ்) தொழிற்சாலைகளில் பணிபுரிவோர் குறுகிய கால பயிற்சி மூலம் திறன் பெற்றோர் அமைப்பு சாரா தொழில்களில் பணி அனுபவம் பெற்றோர் இப்போட்டிகளில் பங்கேற்கலாம்.
மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெறுவோர் மாநிலஅளவில் சென்னையில் நடைபெறும் போட்டிகளுக்கு மாவட்ட ஆட்சியரால் பரிந்துரைக்கப்படுவர். போட்டிகளில் பங்கேற்போர் தவிர பார்வையாளர்களுக்கும் அனுமதி இலவசம்.
மேலும் விவரங்கள் மற்றும் போட்டியில் பங்கேற்பதற்கு www.skilltraining.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்துகொள்ளலாம்.
மேலும் விபரங்களுக்கு பெரம்பலூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வரை 9941752604, 8610217671, 9943417966 என்ற அலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம், என தெரித்துள்ளார்.