Personality Development Training for adolescent girls on behalf of the Government in perambalur

perambalur-icds ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்துறை மற்றும் தனியார் தொண்டு நிறுவனமும் இணைந்து, பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், ஆலத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட 18 அரசுப்பள்ளிகளை சேர்ந்த சுமார் 3 ஆயிரத்திற்கும் அதிகமான வளரிளம் பெண்களுக்கான ஆளுமை மேம்பாட்டுத்திட்டம் குறித்த “தோழி உன்னை அறிந்தால்” என்ற தலைப்பிலான பயற்சி வழங்கும் நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சிப் பணியாளர் க.நந்தகுமார் இன்று துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சிப் பணியாளர் பேசியதாவது:

பெரம்பலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட ஆலத்தூர் வட்டாரம் பொருளாதாரம், மற்றும் பெண் கல்வி உள்ளிட்ட நிலைகளில் மிகவும் பின்தங்கிய நிலையில் காணப்படுவதாலும், அங்குள்ள வளரிளம் பெண்களுக்கு போதிய சத்துக்கள் இல்லை என்பதை போக்கும் வகையிலும் தமிழக அரசின் உத்தரவுப்படி, சிறப்பு நிதி பெற்று ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்துறை மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆலத்தூர் ஒன்றியத்திற்குப்பட்ட 18 அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த வளரிளம் பெண்களுக்கு சத்தான கடலை – பாசிப்பருப்பு உருண்டை, கடலை – கேழ்வரகு உருண்டை, எள்-பொட்டுக்கடலை உருண்டை, இனிப்பு நெல்லிக்கனி, பேரிச்சை – முந்திரி – கொண்டைக்கடலை உருண்டை உள்ளிட்ட , தானிய உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றது, என பேசினார்.

இதற்கு முன்பாக அரசுப்பள்ளிகளை சேர்ந்த மாணவிகள் அமைத்திருந்த அறிவியல் படைப்புகளையும், ஒருங்கிணைந்த குழந்ரதகள் வளர்ச்சித்திட்டம் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மூலமாக வளரிளம் பெண்களுக்கான பாலியல் புரிதல்களை உணர;த்தும் வகையில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சிகளையும் மாவட்ட ஆட்சிப் பணியாளர் பார்வையிட்டார்.

அதனை தொடர்ந்து வளரிளம் பெண்களுக்கு சத்துள்ள உணவு வகைகளை கொடுக்கும் நோக்கில் இந்நிகழ்ச்சியின் மதிய உணவாக கடலை, கேழ்வரகு, எள், இனிப்பு உருண்டைகள், பேரீச்சம் பழத்தில் செய்யப்பட்ட உருண்டைகள், மற்றும் பாசிப்பருப்பில் செய்யட்ட உருண்டைகளும் அனைத்து மாணவிகளுக்கும் வழங்கப்பட்டது.

மேலும் அறிவியல் படைப்புகளை பார்வைக்கு வைத்த அனைத்துப் பள்ளி மாணவிகளுக்கும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டது,

இந்நிகழ்ச்சியில் அரசு அலுவலக பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!