Pharmaceutical sales representative took the cell phone to the young man in prison

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் அருகே உள்ள புதுக்குறிச்சியை சேர்ந்தவர் சின்னனையன் மகன் கதிரவன் (வயது 27). தனியார் மருந்து கம்பனியில் விற்பனை பிரதிநிதியாக உள்ளளார். நேற்று இவர், பெரம்பலூர் அருகே உள்ள நீலியம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட வந்தார்.

அப்போது அங்கு கோயிலுக்கு வந்த வாலிபர்கள் இருவர் கதிரவனை தாக்கி மிரட்டி அவர் வைத்திருந்த ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை பறித்து சென்றனர்.

இது குறித்து கதிவரன் கொடுத்த புகாரின் பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அப்போது செல்போன்களை பறித்து சென்றது பெரம்பலூர் ஆலம்பாடி சாலையில் உள்ள தனியார் கல்லூரி அருகே வசிக்கும் 17 வயது மாணவர் என்பதும், துறையூர் சாலையில் உள்ள தனியார் பாலிடெக்னிக்கில் படித்து வருவதும் தெரிய வந்தது.

மற்றொரு வாலிபர் பெரம்பலூர் கல்யாண் நகரை சேர்ந்த விஜயகுமார் மகன் பிரகாஷ் (வயது 20) என்பதும் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி மூன்றாம் ஆண்டு பயின்று வருவதும் தெரியவந்தது.

இதை அறிந்த போலீசார் குற்றவாளிகள் தப்பிடதா வண்ணம் சாதுர்யமாக செயல்பட்டு வாலிபர்களை மடக்கிப் பிடித்தனர். அந்த இளைஞர்களிடம் இருந்து கதிரவனிடம் பறிக்கப்பட்ட செல்போனை பறிமுதல் செய்தனர்.

பின்னர் பெரம்பலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பிரகாஷை திருச்சி மத்திய சிறையிலும், மற்றொரு வாலிபரை சிறார் கூர்நோக்கு இல்லததிற்கும் அனுப்பி வைத்தனர்.

சாமி கும்பிட வந்தவரின் செல்போனை இளைஞர்கள் தாக்கி பறித்து சென்ற சம்பவம் பெரம்பலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!