Players Selection for Youth State Volleyball Championship: Perambalur District Volleyball Association President Parameshkumar Report!

யூத் ஸ்டேட் வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டிக்கான பெரம்பலூர் மாவட்ட வீரர்கள் தேர்வு குறித்து பெரம்பலூர் மாவட்ட வாலிபால் அசோசியேஷன் தலைவர் பொறியாளர் இரா.ப.பரமேஷ்குமார் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

தமிழ்நாடு வாலிபால் அசோசியேஷன் மற்றும் விருதுநகர் மாவட்ட வாலிபால் அசோசியேஷன் இனைந்து நடத்தும் யூத் வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டிகள் வருகின்ற ஆகஸ்ட் 04-ம் தேதி முதல் ஆகஸ்ட் 09- ம் தேதி வரை விருதுநகர் மாவட்டத்தில் நடைபெறுகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து இந்த போட்டியில் கலந்து கொள்ள, பெரம்பலூர் மாவட்ட வாலிபால் அணி மாணவ, மாணவிகளுக்கான தேர்வு 23.07.2022 (சனிக்கிழமை) அன்று காலை 10.00-மணியளவில் பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க பள்ளி, கல்லூரி மற்றும் கிளப் ஆகியவற்றில் இருந்து திறமை வாய்ந்த வாலிபால் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொள்ளலாம். இதில் கலந்து கொள்பவர்கள் 01.01.2002-க்கு பின் பிறந்தவராக இருக்க வேண்டும். ஆதார் கார்டு நகல், பத்தாம் வகுப்பு (அ)பனிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் நகல், பிறப்பு சான்றிதழ் (வித் அட்டஸ்டேடு), பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-2. ஆகிய ஆவணங்களுடன் கலந்து கொள்ள வேண்டும் என அதில், தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!