Police arrest 3 for possession of cannabis near Perambalur
பெரம்பலூர் மாவட்டம், ஆதனூர் கிராமத்தில் சந்தேகத்திற்குரிய வகையில், 3 வாலிபர்கள் மோட்டர் சைக்கிளில், கடையில் தண்ணீர் வாங்க நின்று கொண்டிருந்ததாகவும், அவர்களை பெரம்பலூர் டி.எஸ்.பி ரோந்து பணியின் போது, நேற்றிரவு பிடித்து விசாரணை நடத்தியதில் அவர்கள் குளத்தூரை சேர்ந்த மகாலிங்கம் மகன் சரத்குமார் (21), கோவை மாவட்டம், காரமடை அருகே உள்ள கண்ணார்பாளையம் கிராமத்தை சேர்ந்த ஆரோக்கியசாமி மகன் சபஷ்டிராஜேந்திரன், திருச்சி மாவட்டம், அழுந்தலைப்பூர் கிராமத்தை சேர்ந்த பரமசிவம் மகன் மாவேந்தேன் ஆகியோர் என்பதும், அவர்களில், சபஷ்டிராஜேந்திரன் வைத்திருந்த பையில் 2 கிலோ கஞ்சா இருப்பதும் தெரியவந்தது.
அப்பொது, அங்கிருந்த ஆதனூர் கிராம மக்கள் ஒன்று திரண்டு இந்த 3 நபர்கள்தான் இதற்கு முன் தங்கள் கிராமத்திற்கு திருட வந்தவர்கள் என்று சத்தம் போட்டு 3
வாலிபர்களையு விடமறுத்து, அங்கேயே வைத்து விசாரிக்க வேண்டும் என டி.எஸ்.பியிடம் வாக்குவாதம் செய்து போலீஸ் ஜீப்பின் முன் நின்று வழிவிடாமல் தடுத்தனர். பின்னர் தகவல் அறிந்த மருவத்தூர் போலீசார் இரவு 11 மணியளவில் சம்பவ இடத்திற்கு வந்து ஊர் பொதுமக்களிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தி 11.30 மணியளவில் மருவத்தூர் போலீஸ் ஸ்டேசனுக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களிடம், மேலும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.