Police arrest teenager for trying to set fire to toad near Perambalur and hand him over to police
பெரம்பலூர் மாவட்டம், வி.களத்தூரில், ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள் கோயில் பஜனை மடம் எதிரே இந்து சமய அறநிலைத்துறை பராமரிக்கப்பட்டு வரும் பெரிய தேர், சிறிய தேர் என 2 உள்ளது. அது தகர கொட்டகை அமைக்கபட்டு பாதுகாப்பாக மூடப்பட்டுள்ளது. அதனை அதே ஊரை சேர்ந்த காதர்கான் மகன் முஹமது சலீம் , தேர்முட்டியில் நிறுத்தில் இருந்த பூட்டை உடைத்து, தகர பிளேட் கதவை திறந்து உள்ளே சென்ற போது, அங்கிருந்த பொதுமக்கள் அவனை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். தேரை கொளுத்த வந்ததாக வாக்குமூலத்தில் ஒப்புக் கொண்டு தெரிவித்தான். இதனால் பதட்டம், ஏற்பட்டது. போலீசார் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தனர். பின்னர், வழக்குப்பதிவு செய்து, கைது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.