Postponement of quarries auction; Perambalur Collector Information!
பெரம்பலூர் கலெக்டர் (பொ) அங்கையற்கன்னி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் மற்றும் ஆலத்தூர் வட்டங்களில் அரசு புறம்போக்கு நிலத்தில் அமைந்துள்ள 4 எண்ணிக்கையிலான கற்குவாரிகளிலிருந்து சாதாரண கற்கள் வெட்டி எடுத்துக்கொள்ள குத்தகை உரிமம் வழங்குவது தொடர்பாக மாவட்ட அரசிதழ் சிறப்பு வெளியீடு எண் 1, நாள்: 19.03.2022-ன்படி அறிவிக்கை செய்யப்பட்டு 23.03.2022 நாளிட்ட தினசரி நாளிதழ் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்று விளம்பரம் செய்யப்பட்டிருந்தது.
குவாரி குத்தகை வழங்குவது தொடர்பாக டெண்டர் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க 29.03.2022 பிற்பகல் 5.00 மணி வரையும் டெண்டர் திறப்பு மற்றும் பொது ஏல நடவடிக்கைகள் 30.03.2022 முற்பகல் 10.30 மணி முதல் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மேற்கண்டவாறு நடத்தப்படவிருந்த டெண்டர், பொது ஏல நடவடிக்கைகள் நிர்வாக காரணங்களுக்காக ரத்து செய்து உத்தரவிடப்படுகிறது. மேலும், டெண்டர், மறு ஏலம் குறித்த நடவடிக்கைகள் தொடர்பாக தனியே அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார்.