booksபெரம்பலூரில் நடந்து வரும் புத்தகக் கண்காட்சி இன்றுடன் நிறைவு பெறுகிறது.

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள நகராட்சி மைதானத்தில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்க ஆதரவுடன், பெரம்பலூர் மக்கள் பண்பாட்டு மன்றம் மற்றும் பெரம்பலூர் மக்கள் சிந்தனைப் பேரவை இணைந்து நடத்தும் 5 ஆவது புத்தகத் திருவிழா ஜன. 29 ஆம் தேதி முதல் துவங்கி நடந்து வருகிறது.

இக்கண்காட்சியில் முன்னணி பதிப்பகங்கள், புத்தக விற்பனை நிலையங்கள் சார்பில் 120 அரங்குகள் அமைக்கப்பட்டு, 5 லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

குழந்தை இலக்கியம்,அறிவியல், ஆன்மீகம்,கலை,வரலாறு, அரசியல், தொழில்நுட்பம், நாவல்கள், மதம் என பல்வேறு பிரிவுகளிலும் புத்தகங்கள் மற்றும் குறுந்தகடுகள் விற்பனைக்கு உள்ளன.

கடந்த 9 நாள்களாக நடைபெற்று வந்த இப்புத்தகக் கண்காட்சி இன்று இரவு 10 மணயுடன் நிறைவு பெறுகிறது.

மாலை 5 மணிக்கு புதுகை பூபாளம் கலைக் குழுவினரின் நிகழ்ச்சியும், மாலை 6 மணிக்கு விழுப்புரம் உதவி ஆட்சியர் வீ.ப. ஜெயசீலன் “படிப் படியாய் படி’ எனும் தலைப்பிலும் உரையாற்றுகிறார்.

இதனைத் தொடர்ந்து, கு. ஞானசம்பந்தம் தலைமையில் “மனித மனத்தை மென்மைப் படுத்துவது கலையா? இலக்கியமா? எனும் தலைப்பில் பட்டிமன்றமும் நடக்கிறது.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!