Precautionary installment vaccination for 1,205 persons in Perambalur district; Deputy Director of Health Services Information!

பெரம்பலூர் மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குநர் செந்தில்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

அரசு வழிகாட்டுதலின்படி, 16.01.2021 முதல் பெரம்பலூர் மாவட்டத்தில் கோவிட் தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக மருத்துவப் பணியாளர்களுக்கும், தொடர்ந்து முன்களப் பணியாளர்களுக்கும் பிறகு இணை நோய் உள்ள 60 வயதிற்கு மேற்பட்டவற்களுக்கும் பிறகு 48 வயது மேற்பட்டவர்களுக்கும் தொடர்ந்து 18 வயது பூர்த்தி அடைந்தவர்களுக்கும், தடுப்பூசி வழங்குதல் வெவ்வேறு கட்டமாக நடைப்பெற்று வருகிறது.

மாவட்டத்தில் இதுநாள் வரை 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் 3,92,793 நபர்களுக்கு முதல் தவணை தடுப்பூசி வழங்கப்பட்டு 87.05 விழுக்காடும், இரண்டாம் தவணையாக 2,83,823 நபர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டு 62.9 விழுக்காடும் சாதனை படைக்கப்பட்டுள்ளது.

தற்போது 03.01.2022 முதல் 15 முதல் 18 வயது நிரம்பியவர்களுக்கு கோ-வேக்சின் தடுப்பூசி மட்டும் வழங்க அரசு அறிவுறுத்தியதின் பேரில் பெரம்பலூர் மாவட்டத்தில் 25,258 நபர்களுக்கு தடுப்பூசி வழங்கி 97 விழுக்காடும் சாதனை அடைந்துள்ளோம்.

தற்போது அரசு வழிகாட்டுதலின்படி, கோவிட் தடுப்பூசி முன்னெச்சரிக்கை தவனை வழங்க 10.01.2022 முதல் பெரம்பலூர் மாவட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது அதன்படி, மருத்துவப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள் மற்றும் இணை நோய் உள்ள 60 வயதிற்கு மேற்பட்ட பொதுமக்கள் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். இரண்டாம் தவணை தடுப்பூசி போட்டு 273 நாட்கள் 39 வாரங்கள் 9 மாதங்கள் பூர்த்தியானவர்கள் முன்னெச்சரிக்கை தவனை தடுப்பூசி போடடுக் கொள்ள தகுதியாளவர்கள்.

20.01.2022 அன்று முன்னெச்சரிக்கை தவணை வழங்குவதற்கான சிறப்பு முகாம் நடத்த அரசு அறிவுறுத்தியதன் பேரில், பெரம்பலூர் மாவட்டத்தில் 31 மையங்களில் தடுப்பூசி வழங்கப்பட்டது. 253 நபர்களுக்கு முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி வழங்கப்பட்டது.

இதுநாள்வரை 819 சுகாதாரப் பணியாளர்களுக்கு முனனெச்சரிக்கை தடுப்பூசி போடப்பட்டு 52 விழுக்காடும், 260 முன்களப்பணிகயார்களுக்கு போடப்பட்டு 34 விழுக்காடும், இணை நோய் உள்ள 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் 126 நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு 34 விழுக்காடும், என மொத்தம் 1205 நபர்களுக்கு முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!