private Candidates for time extension to download a hall tickets to exam
பெரம்பலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் க.முனுசாமி விடுத்துள்ள தகவல் :
மார்ச் – ஏப்ரல் 2017 மேல்நிலைப் பொதுத் தேர்வெழுத விண்ணப்பித்துள்ள தனித் தேர்வர்கள் 29.1.2017 வரை தங்களது தேர்வுக் கூட நுழைவுச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் 28.2.2017 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
எனவே, தேர்வுக் கூட அனுமதிச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்ய விரும்பும் நபர்கள் http://www.dge.tn.gov.in என்ற இணைய தளத்திற்கு சென்று முதலில் Hall Ticket Dewnload என்ற வாசகத்தினை க்ளிக் செய்தால் தோன்றும் பக்கத்தில் உள்ள HIGHER SECONDARY EXAM MARCH- 2017 – PRIVATE CANDIDATE HALL TICKET PRINT OUT என்ற வாசகத்தினை க்ளிக் செய்த தோன்றும் பக்கத்தில் தங்களது விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியினை பதிவு செய்தால் அவர்களுடைய தேர்வுக் கூட அனுமதிச்சீட்டு திரையில் தோன்றும். அதனைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். என தெரிவித்துள்ளார்.