private college Water truck hit the famous lawyer injured in perambalur
பெரம்பலூர் மாவட்டம், வி.களத்தூரை சேர்ந்தவர் வழக்கறிஞர் முத்தமிழ்ச்செல்வன், இவர் பெரம்பலூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ளார்.
இன்று மதியம் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து நான்கு ரோடு நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். மின்வாரிய அலுவகத்திற்கு முன்பு உள்ள திருப்பத்தில் திரும்ப முயன்றார். அப்போது அவ்வழியாக பின் தொடர்ந்து வந்த தனியார் கல்லூரிக்கு சொந்தமான தண்ணீர் லாரி ஒன்று வழக்கறிஞரின் காரின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் படுகாயமடைநத வழக்கறிஞரை அங்கிருந்தவர்கள் பெரம்பலூர் அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப்திந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.