Public demands court to remove statues just as flagpoles were removed from government land!

சமீபத்தில், நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பில், அரசுக்கு சொந்தமான இடத்தில், அரசியல் கட்சியினரின் கொடிக்கம்பங்களை அகற்ற உத்தரவிட்டது போல, அரசுக்கு சொந்தமான இடத்தில், பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறாக உள்ள அனைத்து அரசியல் உள்ளிட்ட தலைவர்களின் சிலைகளையும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென நீதிமன்றத்திற்கு பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரசியலுக்கு வந்தார்கள், வென்றார்கள், கோடிக்கணக்கில் சொத்துகளை குவித்துள்ள, அவர்களுக்கு, சோற்றுக்கு கூட வழியில்லாத அன்றாடம் கூலித் தொழிலாளர்களும், யாசகர்கள் வாங்கும் பொருட்களில் செலுத்திய வரிப் பணத்தில் இருந்தே, அரசியல் தலைவர்களுக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது. இது நியாயமானதல்ல என்பதோடு, மக்கள் வரிப்பணத்தில் ஊழல் செய்து கோடிக்கணக்கான சொத்துகளை குவித்த அரசியல்வாதிகள் அதை சாப்பிட முடியாமல் விட்டு சென்றுள்ளனர். ஆனால், அவர்கள் வாரிசுகள் பல தலைமுறைகளாக ஆடம்பரமாக தின்றுத் தீர்த்தாலும் அழியாது. அப்படிபட்ட, தலைவர்களுக்கு சிலை தேவையில்லை. சுதந்திரம் அடைந்து சுமார் 75 ஆண்டு மேலாகியும் இன்று வரை பலருக்கு அடிப்படை கல்வி, சுகாதாரம், சரிவிகித சத்தான உணவு, மருத்துவம், வேலைவாய்ப்பு, சமூக அங்கீகாரம் கிடைக்கவில்லை.

எனவே, அரசியலில் வெற்றி பெற்று பதவியை அலங்கரித்து, ஆண்டு அனுபவித்து மாண்டவர்ளுக்கு வைக்கப்பபட்ட சிலைகளை அகற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் அரசுக்கும், நீதிமன்றத்திற்கும் கோரிக்கையாக விடுத்துள்ளனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!