punish the private schools run by Special classes in Summer Vacation : The petition to Congress
நாமக்கல் மாவட்டத்தில், கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகளை நடத்தும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் காங்கிரஸ் சார்பில் கோரிக்கைவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து முதன்மைக்கல்வி அலுவலரிடம் நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஷேக்நவீத் கொடுத்துள்ள மனுவில் தெரிவித்திருப்பதாவது:
வெயில் கடுமையாக உள்ள சூழலில் கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகளை நடத்தக் கூடாது என பள்ளிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை மீறி நாமக்கல்லில் உள்ள சில தனியார் பள்ளிகள் 10ம் வகுப்பு,12ம் வகுப்பு மாணவர்களுக்கு இப்போது சிறப்பு வகுப்புகளை நடத்தி வருகின்றன.
கோடை வெயில் கடுமையாக உள்ள சூழலில், அரசு உத்தரவையும் மீறி மாணவர்களை வதைக்கும் தனியார் பள்ளிகள் மீது கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதவிர, அரசுப் பள்ளிகள் திறக்கப்படும் அதே நாளில்தான் தனியார் பள்ளிகளையும் திறக்க வேண்டும் என அரசு உத்தரவிடவேண்டும் என தெரிவித்துள்ளார்.