Quack Doctors for flu remedies are viewing: Government registered doctors will give refuge

பெரம்பலூர் மாவட்டத்தில் தற்போது நிலவி வரும் மர்ம காய்ச்சலுக்கு போலி டாக்டர்கள், மெடிக்கல் வைத்திருப்பவர்கள் வைத்தியம் செய்து வருகின்றனர். இதனால், படிப்பறிவு இல்லாத பொதுமக்கள் அறியாமையால் பாதிப்பு அடைந்து வருகின்றனர்.

மெடிக்கல் வைத்திருப்பவர்கள் பெரும்பாலும் D.pharm படித்தவர்களாக இல்லை. லேப் டெக்னீசியன்கள், 10 படித்தவர்கள், 8 வது படித்தவர்கள், டி..பார்ம் படித்தவர்கள் பெயரில் மெடிக்கல் கடைகளை நடத்தி வருகின்றனர். அவர்கள் அரசு பதிவு மருத்துவர் அல்லது அரசு மருத்துவர் அந்த மெடிக்கலில் பகுதி நேரமாக வந்து வைத்தியம் பார்ப்பாதாக போலியாக ஒரு அறிவிபபு பலகை வைத்து கொள்கின்றனர். அதற்கு மாதம் மாதம் ஒரு கட்டணமாக அந்த மருத்துவருக்கு வழங்கப்படுகிறது.

மேலும், அந்த மருத்துவர்களே போன் மூலம் மருந்து உள்ளிட்டவைகளை வாட்ஸ் அப் மற்றும் எஸ்.எம்.எஸ் மூலமாக அனுப்பி வைக்கின்றனர். இதன் மூலம் வருவாய் அந்த டாக்டர்களுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கிறது என்பதோடு மருந்து பொருட்களை விற்கும் போதும் அதிலும் பங்கு தரப்படுகிறது. இதற்கு ஆசைப்பட்டு அரசு பதிவு பெற்ற மருத்துவர்கள் பொதுமக்கள் உயிருடன் விளையாடுகின்றனர்.

அந்த மெடிக்கல் வைத்திருப்பரோ அல்லது அவருடைய உறவினர்களோ முறையான பயிற்சி இல்லாமல் பொதுமக்களுக்கு வைத்தியம் செய்து வருகின்றனர். சுகாதாரத் துறையும் கண்டுக் கொள்வதில்லை. இதில் சுகாதாரத் துறைக்கும் மாதமாதம் போலி வைத்தியர்கள் கப்பம் செலுத்துவதாக கூறப்படுகிறது.

பொதுமக்கள் போலி வைத்தியர்களை நாடி செல்ல முக்கியம் காரணம் அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாரத நிலையங்களில் உரிய மருந்து மாத்திரைகளை கொடுத்து நிவாரணம் கொடுக்க முடிவதில்லை என்பதும் காரணமாகும்.

மேலும், தனியார் மருத்துவமனைகளிலும் வைத்தியம் பார்க்க போதுமான வருமானம் இன்மை, மற்றும் வறுமை காரணங்களால் போலி மருத்துவர்கள், உள்ளூர் மெடிக்கல் வைத்திருப்பர்வகளிடமே வைத்தியம் செய்து கொள்கின்றனர். பின்னர், பக்க விளைவுகளாலும், உயிரிழப்பும் ஏற்படுகிறது.

சுகாதாரத்துறை அதிகாரிகள் டி.பார்ம் படித்தவர்கள் மட்டுமே மெடிக்கல் நடத்த பணம் வாங்கி கொண்டு அனுதிக்க கூடாது என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த விசயத்தில் மாவட்ட நிர்வாகம் பாரபட்சமின்றி உரிய நடடிவக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!