Rainforest Disaster Relief Teams on behalf of Perambalur District Police
பெரம்பலூர் மாவட்ட காவல் துறை சார்பில் மழைக்கால பேரிடரை எதிர்கொள்ளும் வகையில் பெரம்பலூர். வேப்பந்தட்டை. குன்னம். ஆலத்தூர் ஆகிய நான்கு வட்டத்திற்கும் தனித்தனியாக குழுக்கள் அமைக்கப்பட்டு. பயிற்சி முடித்த காவல் ஆளிநர்களுக்கு உபகரணரங்கள் மற்றும் தனி வாகனங்கள் வழங்கப்பட்டு தயார் நிலையில் உள்ளனர்.
குழுக்ககளுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். மேலும் மழைக்கால பேரிடரை எதிர்கொள்ளும் வகையில் தனியாக 24 மணிநெரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது, மழைவெள்ளம் தொடர்பாக ஏதாவது தகவல் இருந்தால் 04328-224910 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் அளிக்க காவல் துறை சார்பில் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.