Raising the annual income limit for Backward Classes Welfare Schemes: Perambalur Collector!
பெரம்பலூர் கலெக்டர் வெங்கட பிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் (பி.சி, எம்.பி.சி, டி.என்.சி) வகுப்பைச் சார்ந்த மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்த தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. சுயதொழில் செய்து வாழ்வாதாரத்தை மேம்படுத்திட மின்மோட்டாருடன் கூடிய விலையில்லா தையல் இயந்திரம், பித்தளை தேய்ப்புப்பெட்டி ஆகியன வழங்கப்படுகின்றன.
வீடற்ற ஏழை பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மக்கள் வீடு கட்டிக் கொள்ள ஏதுவாக அவர்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்படுகிறது. மேற்படி திட்டங்களின் கீழ் பயன்பெற பயனாளிகளின் ஆண்டு வருமான உச்சவரம்பினை ரூ.72,000-லிருந்து ரூ.1,00,000- ஆக உயர்த்தி தமிழக அரசால் உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே மேற்படி திட்டங்களில் பயன்பெற விரும்புவோர் உரிய சான்றுகளுடன் விண்ணப்பித்து பயன்பெறலாம். மேலும், விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தினை அணுகி பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.