Rajini fans burst crackers at Perambalur

நடிகர் ரஜினியின் அரசியல் அறிவிப்பை வரவேற்ற பெரம்பலூரில் ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
நடிகர் ரஜினிகாந்த் பல ஆண்டுகளாக அரசியலுக்கு வருகை குறித்த கருத்தினை தெரிவிக்கமால் இருந்த நிலையில் இன்று தான் அரசியலுக்கு வருவதாக தெரிவித்துள்ளார். மேலும் இனி வரும் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிட போவதாக அறிவித்தை தொடர்ந்து தமிழகம் முழுவதிலும் நடிகர் ரஜினிகாந்த் ரசிகர் பட்டாசு வெடித்து கொண்டாடடி வருகின்றனர்.
பெரம்பலூரில் பழைய பேருந்து நிலையம், காமராஜர் வளைவு உள்ளிட்ட பகுதிகளில் அனைத்து ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள், ரசிகர்கள் ஒன்று கூடி ரஜினிகாந்த் அறிவிப்புக்கு வரவேற்பு அளித்த பட்டாசு வெடித்து, பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி தங்களது மகிழ்ச்சியினை வெளிப்படுத்தினர். அப்போது ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் (ரவி டிபன் சென்டர்) ரவிச்சந்திரன், தெ.பெ.வைத்தீஸ்வரன் உள்ளிட்ட பலர் இருந்தனர்.










kaalaimalar2@gmail.com |
9003770497