மலேசியா சிறையில் வாடும் தனது கணவரை மீட்டுத்தரக்கோரி மனைவி ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை, பசும்பலூர் கிராமத்தை சேர்ந்த பிரபு மனைவி லெட்சுமி ஆட்சியர் நந்தகுமாரிடம் அளித்துள்ள கோரிக்கை மனு:
எனது கணவர் பிரபு கடந்த 2015ம் ஜூன் மாதம் மலேசியா நாட்டிற்கு வேலைக்கு சென்றார். எனது மகளுக்கு தலையில் கட்டி உள்ளது. அதனை ஆப்ரேசன் செய்யவேண்டி கணவர் பிரபு சம்பாதித்த பணத்தை அவருடன் பணிபுரியும் நண்பரிடம் கொடுத்து வைத்துள்ளார்.
பின்னர் ஆப்ரேசன் செய்யவேண்டும். தான் கொடுத்தபணத்தை திருப்பிக்கொடு என கேட்டஎனது கணவரை அவரது நண்பர் அடியாள் வைத்து அடித்து கொலை மிரட்டில் விடுத்துள்ளனர். இதனால் எனது கணவருக்கு ஒரு கை உடைந்துள்ளது. இந்த தகராறு காரணமாக பொய் வழக்கு போட்டு மலேசியா போலீசார் எனது கணவரை கைது அங்குள்ள சுங்கப்புழு சிறைசாலையில் அடைத்துள்ளனர். எனவே பொய் வழக்கால் மலேசிய சிறையில் இருக்கும் எனது கணவரை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.