redressal camp for ration cardholders in Namakkal district: Collector Asia Mariam Notice
நாமக்கல் மாவட்டத்தில் வருகிற 12ம் தேதி 7 இடங்களில் ரேசன்கார்டுதாரர்கள் குறைதீர் முகாம் நடைபெறுகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் மூலம் மாவட்டம் முழுவதும் தாலுக்கா தோறும் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமையன்று ரேசன்கார்டுதாரர்கள் குறைதீர் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி இம்மாதத்திற்கான பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம்கள் வருகிற 12ம் தேதி சனிக்கிழமை காலை 10 மணிக்கு குறிப்பிட்ட ரேசன்கடைகளில் நடைபெறுகிறது.
நாமக்கல் தாலுக்கா மோகனூர் ரேசன் கடை, சேந்தமங்கலம் தாலுக்கா தாண்டாகவுண்டனூர் ரேசன்கடை, ராசிபுரம் தாலுக்கா வெள்ளக்கல்பட்டி ரேசன்கடை, கொல்லிமலை தாலுக்கா சோளக்காடு ரேசன் கடை, திருச்செங்கோடு தாலுக்கா கோழிக்கால் நத்தம் ரேசன்கடை, குமாரபாளையம் தாலுக்கா பல்லக்காபாளையம் ரேசன்கடை, பரமத்தி வேலூர தாலுக்கா ஊஞ்சப்பாளையம் ரேசன்கடை ஆகிய 7 ரேசன்கடைகளில் வட்ட வழங்கல் அலுவலர்களால் இந்த முகாம் நடத்தப்படுகிறது.
முகமில் பொது விநியோகத் திட்டத்தை செயல்படுத்தும் துறைகளைச் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொள்வார்கள். பொதுமக்கள் தங்களது ஸ்மார்ட் ரேசன்கார்டு தொடர்பான திருத்தம் மற்றும் பொதுவிநியோகத் திட்ட கடைகளின் செயல்பாடுகள் குறித்தும் இந்த முகாம்களில் தெரிவிக்கலாம்.
மேலும், பொது விநியோகத்திட்ட பொருட்கள் கிடைப்பது குறித்தும், தனியார் துறையில் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகள், நுகர்வோட;கள் ஏமாற்றப்படுவது அல்லது குறைகள் இருப்பது குறித்தும் தெரிவித்தால் விரைந்து தீர்வு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே, பொதுமக்கள் அனைவரும் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.