Regional education office is dragging academic teacher without livery allowance sit in Namakkal
தமிழக அரசின் கல்வித்துறை பிழைப்பூதியத்தை வழங்காமல் இழுத்தடிப்பதாக கூறி, நாமக்கல் வட்டார கல்வி அலுவலகத்தில், பெண் ஆசிரியை தர்ணா போராட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நாமக்கல் ராமாபுரம்புதூர் அரசு துவக்கப்பள்ளியில், உதவி ஆசிரியராக பணியாற்றியவர் விஜயலட்சுமி. அவர் மீது குற்றச்சாட்டு எழுந்ததால், 2015, நவ. 13ம் தேதி சஸ்பென்ட் செய்யப்பட்டார். தொடர்ந்து, போலீசிலும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை மாலை, 4.30 மணிக்கு, நாமக்கல் வட்டார கல்வி அலுவலகத்தில், ஆசிரியை விஜயலட்சுமி தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதுகுறித்து அவர் கூறியதாவது: என் மீது பொய்யான குற்றச்சாட்டு, பொய்யான வழக்கு காரணமாக, கல்வித்துறையால் சஸ்பென்ட் செய்யப்பட்டு உள்ளளேன்.
கடந்த, ஆகஸ்ட் மாதம் முதல், எனக்கு வரவேண்டிய பிழைப்பூதியம் இன்று வரை வழங்கவில்லை. அலுவலக விசாரணை முடிந்தும் இதுவரை எவ்வித காரணமுமின்றி எனக்கு பணி வழங்க மறுக்கின்றனர். என்னுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.
இது குறித்து வட்டார கல்வி அலுவலர் சுப்ரமணியன் கூறியதாவது: ஆசிரியயை விஜயலட்சுமி சஸ்பெண்ட் செய்யப்பட்ட பின் முதல் ஆறு மாதத்துக்கு, 50 சதவீத சம்பளம், தொடர்ந்து இரண்டரை ஆண்டுகளாக 75 சதவீதம் சம்பளம் பெறுகிறார்.
மீண்டும் பணியில் சேர அவர் முயற்சி எடுக்கவில்லை. மேலும், அவர் நேரில் வராமல் அவரது கணவர் மூலம் கடிதம் கொடுத்தனுப்புகிறார். துறையின் வேலைப்பளு, அலுவலக இடமாற்றம் காரணமாக இரண்டு மாதமாக சம்பளம் போடமுடியவில்லை.
முறையாக அவர் கடிதம் கொடுத்தால் சம்பளம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். வட்டாரக்கல்வி அலுவலகத்தில் அமர்ந்து சஸ்பென்ட் செய்யப்பட்ட ஆசிரியை தர்னா போராட்டத்தில் ஈடுபட்டதால் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.