Relief supplies on behalf of Aswins for a female laborer who lost her job due to the Corona curfew and is struggling with 3 children

பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கால் பலர் வேலையிழந்து பெரும் சிரமப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு சேவை எண்ணம் கொண்டோர் நிவாரணப் பொருட்களை வழங்கி உதவி வருகின்றனர். இந்த நிலையில் கேபிள் பதிப்பதற்காக பள்ளம் தோண்டும் வேலை பார்த்து வந்த பெரம்பலூர் வெங்கடேசபுரம் பகுதியைச் சேர்ந்த பானு என்பவர் ஊரடங்கால் வேலை இழந்துள்ளார். கணவருக்கும் வேலை இல்லாததால் மூன்று குழந்தைகளுடன் சிரமப்பட்டு வந்துள்ளார். இது பற்றிய தகவல் அறிந்த அஸ்வின்ஸ் பேக்கரி & உணவகம் அந்த பெண் கூலித் தொழிலாளி குடும்பத்திற்கு உதவி செய்துள்ளது. அஸ்வின்ஸ் குழுமத் தலைவர் கே.ஆர்.வி.கணேசன்,1 சிப்பம் அரிசி,1 மாதத்திற்கு தேவையான மளிகைப் பொருட்கள் மற்றும் காய்கறிகள் ஆகிய நிவாரணப் பொருட்களை வழங்கினார். நிவாரணப் பொருட்களை பெற்றுக் கொண்ட கூலித் தொழிலாளி பானு நன்றி தெரிவித்தார்.அப்போது அஸ்வின்ஸ் மேலாளர் அசோக் உடனிருந்தார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!