Road awareness program for government school students
பெரம்பலூர் அருகே உள்ள வி.களத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி “திருச்சி டோல்வே பிரைவேட் லிமிடெட்” சார்பில் நடைபெற்றது. இதில், டி.டி.பி அலுவலர்கள் சாலை பாதுகாப்பு குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்தனர்.
நிகழ்ச்சிக்கு, தலைமை வகித்த தலைமை ஆசிரியர் முருகேசன், சாலை பாதுகாப்பு விதிகளின் அவசியம் குறித்து விளக்கினார். மேலும், தனது வாழ்க்கையில் ஏற்பட்ட சாலை விபத்து குறித்தும் மாணவர்களுக்கு கூறினார்.
வி.களத்தூர் ’தாய் பவுண்டேசன் அறக்கட்டளை நிறுவனர் கமால் பாஷா, சுங்கச் சாவடி நிறுவனத்தின் முதுநிலை மேலாளர் ரத்தினவேல், சுங்கச் சாவடி மேலாளர் அருண்ராஜ் ஆகியோர் மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்தும் விளக்கிப் பேசினர்.
மாணவர்களுக்கு, சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது. சாலை விபத்துக்களால் ஏற்படும் விபரீதங்கள், சாலை விதிமீறல்களால் ஏற்படும் விபத்துகள் குறித்தும் காணொளி காட்சிகள் மூலம் விளக்கப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.