Road Safety Corners Center at Vallalar Honda: Perambalur Collector inaugurated.

பெரம்பலூர் : தமிழகத்தில் இருசக்கர வாகன விபத்துக்கள் அதிக எண்ணிக்கையில் நடைபெற்று வருகின்றன. அதன்படி 2017 ஜனவரி முதல் 2017 அக்டோபர் முடிய நடைபெற்ற 21,431 இரு சக்கர வாகன விபத்துக்களில் 4,730 நபர்கள் இறந்துள்ளனர்.

இத்தகைய விபத்துக்களை குறைக்கும் வகையிலும், வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதனடிப்படையில் பெரம்பலூர் மாவட்டத்தில் போக்குவரத்து துறை சார்பாக இருசக்கர வாகன விற்பனை உரிமையாளர்கள் மூலமாக தங்களது விற்பனை மையங்களில் சுழயன ளுயகநவல ஊழசநெசள சாலை பாதுகாப்பு மையம் அமைக்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் இன்று (27.11.2017) வள்ளலார் ஹோண்டா விற்பனையகத்தில் சாலை பாதுகாப்பு மையத்தை மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா திறந்து வைத்தார்.

இந்த சாலை பாதுகாப்பு மையத்தில் சாலை பாதுகாப்பு உபகரணங்களான ஒலி, ஒளி மற்றும் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வாகன நுகர்வோர்களுக்கு வழங்கப்பட உள்ளது.

இத்திட்டத்தின் மூலம் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு பாதுகாப்பாக வாகனங்களை இயக்குவது தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும், புதிதாக இருசக்கர வாகனங்கள் வாங்கும் அனைத்து நுகர்வோர்களுக்கும் இலவசமாக தலைக்கவசம் வழங்குவதையும் மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

பெரம்பலூh; மாவட்டத்தில் உள்ள அனைத்து இருசக்கர வாகன விற்பனை நிலையங்களிலும் இதுபோன்ற சாலை பாதுகாப்பு மையம் ஏற்படுத்தப்பட்டு வாகன ஓட்டிகளுக்கு கவனமுடன் வாகனங்களை இயக்குவதற்கு தேவையான விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்கண்ட நிகழ்ச்சியில் வட்டார போக்குவரத்து அலுவலர் அறிவழகன், பெரம்பலூர் வள்ளலார் ஹோண்டா ஜெ.அரவிந்தன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!