perambalur-roever-sports-academy
ரோவர் கல்வி நிறுவனங்களில் புதிதாக துவங்கப்பட்டுள்ள “ஹேன்ஸ் ரோவர் விளையாட்டு பயிற்சி மையம்” ரோவர் தொழில் நுட்ப வளாகத்தில் புதிதாக கையுந்து பந்து( Volley Ball ), கூடைப் பந்து ( Basket Ball ), டென்னிஸ்( Tennis ) பயிற்சி ஆடுகளம் ஆகியவை நேற்று புதன் கிழமை புதியதாக துவக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ரோவர் கல்விக் குழுமத்தின் தலைவர் செவாலியர் டாக்டர். வரதராஜன் ஆடுகளத்தினை திறந்து வைத்து பேசுகையில் மாணவர்கள் இந்த வாய்ப்பினை முழுமையாகப் பயன்படுத்தி சிறந்தப் பயிற்சி பெற்று மாவட்ட மாநிலப் போட்டிகளில் பங்குப் பெற்று வெற்றிப் பெற வேண்டுமென கூறினார்.
இந் நிகழச்சியில ஹேண்டா ஷோரூம் உரிமையாளர் ஜெ.அரவிந்தன், பாரத் டிரான்ஸ்போர்ட்ஸ் அதிபர் ஜெயராமன், பர்ஸட் ஸ்கூல் தாளார் நிறுவனத்தின் தலைவர் ஜெ.கார்த்திக், ராமகிருஷ்ணா கல்வி நிறுவன செயலாளர் விவேகானந்தன் மற்றும் வழக்கறிஞர் பாபு ஆகியோர் முன்னிலை வைகித்தனர்.
இந்நிகழ்ச்சியின் முதல் ஆட்டத்தினை ரோவர் கல்விக் குழுமத்தின் துணை தலைவரும், ரோட்டரி புதிய தலைமுறை துணை ஆளுநர் ஜான் அசோக் வரதராஜன் துவக்கி வைத்தார்.
முன்னதாக ரோவர் பொறியியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் அல்லிராணி அனைவரையும் வரவேற்றார். ரோவர் பொறியியல மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் முதல்வர் முனைவர் கணேஷ்பாபு நன்றி கூறினார்.
இவ்விழாவிற்கான ஏற்பாட்டினை அலுவலர் மேலாளர் ஆனந்தன் மற்றும் உடற்கல்வி பேராசிரியர்கள் புகழேந்தி, வெற்றிவேல், அறிவழகன் ஆகியோர் செய்திருந்தனர்.