Rover Engineering College, the Guinness World Records recognized the show was hosted by the Rotary Club
பெரம்பலூர் ரோவர் பொறியியல் கல்லூரியில் மாணவ இளைஞர்களைக் கொண்டு ” யூ கேன் யூ வில் ” என்ற ஆங்கில விழிப்புணர்வு மனித எழுத்து வாக்கியம் அமைக்கும் கின்னஸ் உலக சாதனைக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது.
ரோவர் பொறியியல் கல்லூரி மைதானத்தில் கடந்த ஆகஸ்டு 10-ஆம் தேதி சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு, சர்வதேச ரோட்டரி சங்கம் மாவட்டம் 3000, பெரம்பலூர் புதிய தலைமுறை ரோட்டரி சங்கம், ரோவர் கல்வி நிறுவனங்கள், ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்கள் மற்றும் சுவாமி விவேகானந்தா கல்வி நிறுவனங்களோடு இணைந்து கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் பள்ளி, சுவாமி விவேகானந்தா மெட்ரிக் பள்ளி, புனித ஜோசப் மெட்ரிக் பள்ளி ஆதரவுடன் முற்றிலும் மாணவர்களைக் கொண்டு (சுமார் 16 ஆயிரத்து 550 மாணவர்களை) ஒரே மைதானத்தில் “உன்னால் வெல்ல முடியும்” என்ற விழிப்புணர்வு வாக்கியம் அமைக்கும் உலக சாதனை நடைபெற்றது.
16,550 மாணவர்களை கொண்டு மனித எழுத்து வாக்கியம் அமைக்கப்பட்டதினால் ஏற்கனவே செய்யப்பட்ட உலக சாதனை முறியடிக்கப்பட்டது.
இந்த கின்னஸ் சாதனை இப்போது உலக சாதனையாக ஏற்றுக் கொள்ளப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த சாதனை இந்திய சாதனை புத்தகத்தில் சாதனையாக பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த கின்னஸ் உலக சாதனைக்கு அங்கீகாரம் கிடைத்திருப்பதில் ரோட்டரி மாவட்டம் 3000 ஆளுநர் ரோட்டரியன் முருகானந்தம், திட்ட ஒருங்கிணைப்பாளர் ரோட்டரியன் ஆனந்த ஜோதி, திட்ட தலைவர் மற்றும் துணை ஆளுநர், ரோட்டரியன், ஜான் அசோக் வரதராஜன், திட்ட செயலாளர் ரோட்டரியன் விவேகானந்தன் மற்றும் ரோட்டரியன் அரவிந்தன் ஆகியோர்கள் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டதோடு சாதனை முயற்சியில் பங்கேற்ற அனைத்து மாணவர்கள் மற்றும் அமைப்பாளர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார்கள்.