Rs. 30 lakh target for the district; Rs. 1 lakh for CBSE, Rs. 50 thousand for matriculation school! Private school principals, education department officials are wavering!
கல்வித் துறையில் பல புரட்சிகள் அறிவியலால் வந்தாலும், அரசியல்வாதிகள் தாங்கள்தான் கொண்டு வந்ததாக மார்தட்டிக் கொள்வது வழக்கம். தமிழ்நாடு அரசு பள்ளிகளில் நடத்த போகும் பெற்றோர்களை கவுரவிக்கும் விழா ஒன்றுக்காக தமிழகத்தில் உள்ள மாவட்ட வாரியாக தனியார் பள்ளிகளில் குறைந்த பட்சம் ரூ. 30 லட்சமும், அதிக பட்சமாக 50 லட்சம் வரை கட்டாய நன்கொடை வசூலிக்க கல்வித்துறை அதிகாரிகளுக்கு வாய்மொழி உத்திரவு வந்ததுள்ளதாக கூறப்படுகிறது.
அந்த வசூலை செய்ய போகும் போது அதிகாரி தனியாக செல்ல வேண்டும், பள்ளி சேர்மன் அல்லது தாளாருடன் யாரும் அருகில் இருக்க கூடாது. கட்டாய நன்கொடையை காசோலை, வரைவோலையாக பெறாமல், ரொக்கமாக சிசிடிவி கேமரா இல்லாத பகுதியில் பெற்றுவர அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதிகாரிகளும், தனித்தனியாக பள்ளி தாளாளர்களை சந்தித்தால், பல தாளாளர்கள் இந்த வருடம், அட்மிசன் சரியில்லை, மாணவர்கள் குறைவு, ஆசிரியர் உள்ளிட்ட பணியாளர்களுக்கு உரிய காலத்தில் சம்பளம் கொடுக்க முடியவில்லை என வசூலுக்கு வரும் அதிகாரிகளிடம் புலம்புகின்றனர். நீங்கள் வேறு இதனால், அசந்து போகும் அதிகாரிகள் எப்படி டார்கெட்டை எட்டுவது என வழி தெரியாமல் விழி பிதுங்கி நிற்கின்றனர்.
இது மட்டுமில்லாமல், அதிகாரிகள், அரசியல்வாதிகளுக்கு இலவச சீட் மற்றும் லட்டர் பேடு கட்சிகள் முதல் பெரிய கட்சிகள் வரை நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு நன்கொடை மற்றும் தேர்தல் நன்கொடை என பல விதங்களில் மொய் எழுவிட்டு இருக்கும் நிலையில் புதிதாக வந்துள்ள கட்டாய நன்கொடை வசூலை கண்டு பல பள்ளி நிர்வாகத்தினர் ஆடிப்போய் உள்ளனர். எப்படி ஈடுகட்டுவது என புலம்பிய நிலையில், வாய் பேசமுடியாதவர் கனவு கண்டது போல் பல பள்ளி நிர்வாகிகள் திகைத்து வருகின்றனர்.
கல்வித்துறை தங்களுக்கு ஒதுக்கபட்டு நிதியில் பள்ளிகளையும், நிகழ்ச்சிகளையும் நடத்த வேண்டும் என்றும், அனைத்து தரப்பினரும் கேட்டுக் கொள்வதோடு, அரசு பள்ளி கல்வியில் திருப்தி அடையாதவர்களே தனியார் பள்ளியை நாடுகின்றனர். அங்கே இது போன்ற கட்டாய நிதி வசூல் வந்தால், அது , ஏதோ, ஒரு விதத்தில் மாணவர்களிடமே வசூலிக்கப்படும் என்பதை அரசு அதிகாரிகள், கல்வித்துறையினர் அறிய வேண்டும் என தெரிவிக்கின்றனர்.
கல்விக்காக ஒதுக்கப்படும் நிதியை தாராளமாக செலவு செய்வதோடு, தேவையற்ற செலவுகளை சுருக்க அரசு திட்டம் தீட்ட வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். பெரும்பாலான அரசு பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகள் அரசு பள்ளிகளில் படிக்காமல், தனியார் பள்ளிகளிலே கல்வி பயில்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.