பெரம்பலூர் : நடைபெற இருக்கும் சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு பெரம்பலூர் மற்றும் குன்னம் சட்ட மன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் பறக்கும் படையினர் மற்றும் தீவிர கண்காணிப்பு குழுவினருடன் சேர்ந்து கூடுதல் பறக்கும் படையினர் 24 மணி நேரமும் தொடர் வாகனச் சோதனை மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று இரவு பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நொச்சியம் ஆதிதிராவிடர் காலனி மாரியம்மன் கோவில் அருகில் சரவணன் என்பவருடன் 13 நபர்கள் உரிய ஆவணங்களின்றி வைத்திருந்த ரூ.1,01,000 மதிப்பிலான ரொக்கத்தை கருணாநிதி தலைமையிலான கூடுதல் பறக்கும் படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது, கண்டுபிடிக்கப்பட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட பணம் வருவாய் கோட்டாட்சியர் பேபியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.