RSS in Perambalur The parade procession Volunteer
பெரம்பலூர் அரியலூர் மாவட்ட ஆர்.எஸ்.எஸ். தன்னாவலர்களின் அணிவகுப்பு ஊர்வலம் பெரம்பலூரில் நடந்தது
ஆர்.எஸ்.எஸ். இயக்கம் தொடங்கி 93-வது ஆண்டில் நுழைந்துள்ளதை குறிக்கும் வகையிலும், இயக்கம் விஜயதசமி அன்று தொடங்கப்பட்டதால் அந்த வெற்றிவிழாவை கொண்டாடும் வகையிலும் சீருடை அணிந்த பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களை சேர்ந்த ஆர்.எஸ்.எஸ்.தன்னார்வலர்களின் அணிவகுப்பு ஊர்வலம் நேற்று நடந்தது.
பாரத மாதா, ஆர்.எஸ்.எஸ். நிறுவனர் டாக்டர் ஹெட்கேவார் படங்கள் அலங்கரித்து வேனில் வைக்கப்பட்டிருந்தது.
ஊர்வலத்திற்கு திருச்சி மண்டல தலைவர் வழக்கறிஞர் பிரசன்னம் தலைமை வகித்தார். முன்னாள் நகர்மன்ற கவுன்சிலர் சிவராமலிங்கம் ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.
ஊர்வலம் வெங்கடேசபுரத்தில் இருந்து புறப்பட்டு சங்குப்பேட்டை, எடத்தெரு, பெரிய தெற்குத் தெரு, அனைத்து மகளிர் காவல் நிலையம், அம்பேத்கார்சிலை, காந்திசிலை, பெரியார் சிலை, பூசாரி தெரு வழியாக சென்று தேரடி திடலை அடைந்தது.
அங்கு நடந்த பொதுக்கூட்டத்திற்கு அஸ்வின்ஸ் நிறுவனர் கணேசன் தலைமை வகித்தார்.
ஆர்.எஸ்.எஸ்.தர்ம ரட்சன சமிதி மாநில பொறுப்பாளர் ராஜமுருகானந்தன் சிறப்புரைஆற்றியதாவது.
இந்து மதத்தை வரலாறு இந்து மதம் என்று கூறவில்லை. இந்து தர்மம் என்றே கூறுகிறது. தர்மம் செத்துவிட்டதால் எல்லா வளங்கள் இருந்தும் நம்தேசம் அடிமைபட்டுகிடக்கிறது.
அரசியலில் சீமான், மனுசபுத்திரன் போன்றவர்கள் எல்லாம் தங்களது பெயர்களை மாற்றிவைத்துக்கொண்டு இந்து தர்மத்தையும், இந்து வரலாற்றையும் அழித்து வருகின்றனர்.
தேசவளர்ச்சிக்காகவும், இந்துக்களுக்காகவும் தொடங்கப்பட்ட இந்த இயக்கம் 75ஆயிரம் கிளைகளுடன் வளர்ந்துள்ளது, என்றும் தெரிவித்தார்.