sales raise, Ale Packets imported from other districts in the district of Perambalur.

வேறு மாவட்டங்களில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பாக்கட் சாரயம் பெரம்பலூர் மாவட்டத்தில் விற்பனை அதிகாரிப்பு.

ale-pockets

பெரம்பலூர் : வேறு மாவட்டங்களில் இருந்து தருவிக்கப்ட்ட பாக்கட் சாரயம், பெரம்பலூர் மாவட்டத்தில் விற்பனை அமோகம்

பெரம்பலூர் : தமிழ்நாடு முழுவதும் முழுவதும் மதுவிலக்கு குறித்த போராடங்கள், ஆர்ப்பாட்டங்கள், அறிவிப்புகள் நடந்த வண்ணம் உள்ளன. மேலும், தமிழ்நாடு அரசும் மதுவிலக்கு படிப்படியாக அமல்படுத்துவதாக அறிவித்து மதுக்கடைகள் திறக்கும் நேரம் குறைத்து குறிப்பது அறிவிப்பும் செய்துள்ளது.

ஆனால், இதனால் கொண்டாட்டம் அடைந்த மது அருந்தும் கூடங்களின் உரிமையாளர்கள் , மதுவை, அரசு மது பானக் கடையில் மொத்தமாக வாங்கி வைத்து கொண்ட, அதிகாரிகள் உதவியுடன் இரவு பகலாக சந்துக் கடை நடத்தி லட்சக்கணக்கில் காசு பார்த்து வருகின்றனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் 24 மணி நேரமும், மது தங்கு தடையின்றி சந்துக் கடைகளில் மதுபானம் கிடைத்து கொண்டிருக்கிறது. இதை நடத்துபவர்கள் பெரும்பாலும் ஆளுங்கட்சியினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மதுபாட்டில்கள், அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதால், தற்போது அரசு சாராயத்திற்கு போட்டியாக வெளி மாவட்டங்களில் சாராயம் காய்ச்சும் தொழில் நுட்ப வல்லுநர்கள் தற்போது மலைப்பகுதிகள், ஆற்றுப்படுகைககள், மற்றும் வனப்பகுதிகளில் காய்ச்சப்பட்ட கள்ளச் சாராயம் பாக்கட் செய்யப்பட்டு, பெரம்பலூர் மாவட்டத்தில் ஆறாக ஓடி கொண்டிக்கிறது.

ஒரு பாக்கட் விலை ரூ. 30 அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அரசு மது பானக் கடையை விட சாராயம் மிக விலை குறைவு என்பாதால் பெரம்பலூர் மாவட்ட குடிமகன்கள் பாக்கட் சாராயம் பக்கம் திரும்பி விட்டனர்.

தற்போது விற்கப்டும் சாராயம் அதிகமாக ஸ்பிரிட்மாக இருக்க வாய்ப்புள்ளது. சாராயத்தை நுகர்ந்தால் வாடை தெரியாமல் இருக்க சுடு தண்ணீர் கலந்து காய்ச்சி பதப்படுத்தப்டுவதால் சாரய வாசனை வெளி தெரியாது. குடித்தால் மட்டுமே போதை தருகிறது என்பதுதான் புதுமை.

இது போன்ற தரமற்ற கள்ளச் சாராயம் அருந்தியவர்கள் கொத்து கொத்தாக பலர் மாண்டது, நாளேடுகளில் வந்த செய்தி. அரசு தரப்பில், ஆட்சியர் முதல் துறை அதிகாரிகள் அலட்சியமாக இருக்கிறார்களா ! அல்லது சாதகமாக பயன்படுத்தி கொள்கிறார்களா!! என்பது அவரவர் மனசாட்சிக்கே வெளிச்சம்…!!


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!