Scholarship for BC, MBC, DNC Students : Perambalur Collector Info!

பெரம்பலூர் கலெக்டர் வெங்கடபிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும், பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் (பி.சி, எம்.பி.சி, டி.என்.சி) மாணவ / மாணவியருக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மூன்றாண்டு இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் பிவ/மிபிவ/சீம மாணவ/மாணவியருக்கு இலவச கல்வித் திட்டத்தின் கீழ் எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிற படிப்புகளுக்கு பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.2,50,000/-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மாணவ/மாணவியர்களுக்கான கல்வி உதவித்தொகை கல்வி உதவித்தொகை இணையதளம் (Scholarship Portal) புதுப்பித்தலுக்கு 10.11.2022 முதல் செயல்பட துவங்கும். புதுப்பித்தலுக்கான (Renewal) விண்ணப்பங்கள் 06.12.2022-க்குள் இணையதளம் மூலம் கேட்புகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். அதேபோல் புதிய இனங்களுக்கு (Fresh) இணையதளம் 15.12.2022 முதல் செயல்படத் துவங்கும். புதிய இனங்களுக்கான விண்ணப்பங்கள் 20.01.2023-க்குள் இணையதளம் மூலம் கேட்புகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகலாம். https://www.bcmbcmw.tn.gov.in/welfschemes.htm#scholarshipschemes என்ற அரசின் இணையதளத்திலும் இத்திட்டங்கள் குறித்த விவரங்கள் மற்றும் விண்ணப்ப படிவங்களை பதிவிறக்கம் செய்து இணையதளம் மூலமாகவே விண்ணப்பிக்கலாம், என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!